போன மேட்ச் சீரிப்பாய்ந்த ஸ்ரீலங்கா, இந்த மேட்ச் பொட்டிப்பாம்பாய் அடங்கியது.. முதல் இன்னிங்சில் 164க்கு ஆல் அவுட்.. பாலோ-ஆன் செய்யும் பரிதாபம்!

0
67

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இலங்கை அணி, 416 ரன்கள் பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்சில் பாலோவ் ஆன் செய்து விளையாடி வருகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை கடைசி நேரத்தில் இழந்து பரிதாபமாக தோல்வியை தழுவியது இலங்கை அணி.

- Advertisement -

அதைத்தொடர்ந்து நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன்(215) மற்றும் ஹென்றி நிக்கோஸ்(200*) இருவரும் இரட்டை சதம் அடிக்க, 580 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் அடித்திருந்தது.

554 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணிக்கு, கேப்டன் கருணரத்தினே(89) அரைசதம் கடந்து ஒரு முனையில் நின்றுகொள்ள மற்ற வீரர்கள் வருவதும் போவதும் தெரியாத அளவிற்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணியை விட 416 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் ஃபாலோவ் ஆன் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு, கேப்டன் கருணரத்னே 51 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஓஷக்கா பெர்னாண்டோ ஐந்து ரன்களுக்கு அவுட்டானார். மூன்றாம் நாள் முடிவில் 113 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்திருந்தது இலங்கை அணி. குஷால் மெண்டிஸ் 50 ரன்களுடனும், ஆஞ்சலோ மேத்யூஸ் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தற்போது வரை 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

முதல் போட்டியில் அவ்வளவு சிறப்பாக விளையாடிய இலங்கை அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பது பரிதாபமாக தெரிகிறது.