தோனிக்கு பிறகு இதை செய்துகாட்டிய ஒரே வீரர் ஜோஸ் பட்லர்!

0
3970

தோனிக்கு பிறகு இப்படி ஒரு சாதனையை படைத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர்.

டி20 உலக கோப்பை தொடரின் எட்டாவது எடிசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது.

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிய இந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தி பாகிஸ்தான் அணியை 20 ஓவர்களில் எட்டு விக்கெட் வீழ்த்தி 137 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.

பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள், கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்துக்காக பந்துவீச்சில் சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றலாம் என்ற முனைப்பில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 19 ஓவர்கள் முடிவில் எட்டி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்காக இறுதி வரை ஆட்டம் இழக்காமல் போராடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement -

இரண்டாவது முறையாக வரலாறு படைத்த இங்கிலாந்து!

கடந்த 2010ம் ஆண்டு பால் காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றது. அதன் பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 உலககோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றிருக்கிறது.

தோனிக்கு பிறகு பட்லர்!

2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதன் பிறகு வேறு எந்த அணியின் விக்கெட் கீப்பர் கேப்டனும் டி20 உலககோப்பையை கைப்பற்றியது இல்லை.

2022ம் ஆண்டுக்கான உலககோப்பையை ஜோஸ் பட்லர் பெற்றுக்கொடுத்து, தோனிக்கு பிறகு இந்த சாதனையை படைத்த விக்கெட் கீப்பர் கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.