12 வருடம் கழித்து மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஜெயதேவ் உனட்கட்; உடனடியாக சூரியகுமார் யாதவ் வீடியோ காலில் பேசி வாழ்த்திய போது கண்ணீர்!

0
584

12 வருடங்கள் கழித்து மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்ததற்கு உனட்கட்-க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா குமார் யாதவ்.

2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகினார் ஜெயதேவ் உனட்கட். ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

நடுவில் ஏழு ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு தவிர்த்து வந்தார்.

முகமது சமி, வங்கதேச ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறினார். தற்போது அவரால் டெஸ்ட் தொடரிலும் விளையாட முடியாது என மருத்துவ குழுவினர் தெரிவித்து விட்டனர். ஆகையால் முகமது சமிக்கு மாற்று வீரராக வங்கதேச டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறார் ஜெயதேவ் உனட்கட்.

சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக செயல்பட்ட உனட்கட், சௌராஷ்டிரா அணிக்கு கேப்டன் பொறுப்பிலும் இருந்தார். இறுதியில் சௌராஷ்ட்ரா அணி கோப்பையை வெல்வதற்கும் உதவினார். தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் நன்றாக செயல்பட்டு வருவதால் இவருக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

- Advertisement -

கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பதால் உனட்கட் நெருங்கிய நண்பர் சூர்யகுமார் யாதவ் உடனடியாக வீடியோ கால் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அப்போது கண்ணீருடன் பேசியுள்ளார் உனட்கட். இந்த உணர்ச்சிபூர்வமான தருணத்தை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக சூரியகுமார் யாதவ் வைத்திருப்பது வைரலாகியுள்ளது.