விராட் கோலி ஓய்வு பெறும் நேரம் இதுதான்; அவர் இப்படித்தான் ஓய்வு பெறுவார் – பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி!

0
272
Virat kohli

தற்கால கிரிக்கெட்டில் மட்டும் இல்லாது மொத்த கிரிக்கெட்டையும் எடுத்து வைத்துப் பார்த்தால், அதில் மிகச் சிறப்பான ஒரு இடம் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலிக்கு கட்டாயம் உண்டு. அவர் இதே திறமையோடு எந்த கிரிக்கெட் காலத்தில் பிறந்திருந்தாலும் கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்திலேயே இருந்திருப்பார்.

விராட் கோலி தற்போது விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கும் அளவிற்கு இதுநாள் வரையில் மிகச் சிறப்பாக விளையாடி வைத்திருக்கிறார். குறிப்பாக வெள்ளைப் பந்து போட்டிகளில் அபார சாதனைகளுக்கு சொந்தக்காரரான முன்னாள் இந்திய வீரர் சச்சின் அவரது சாதனையின் இடங்களில் விராட் கோலியின் பெயர் பொறிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

கிரிக்கெட் எப்பொழுதும் மேலே உயர்த்தும் தன் விருப்பமான வீரர்களையும் கூட சோதிக்காமல் விட்டதே கிடையாது. கிரிக்கெட்டின் தனித்தன்மையான ஒரு விஷயம் இதுதான். இதில் விராட் கோலியும் தப்பவில்லை. 2019ஆம் ஆண்டு அவர் கடைசியாக சதமடித்த பொழுது, இதற்கு அடுத்த சதம் உங்களுக்கு 2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் தான் வரும் என்று யாராவது சொல்லியிருந்தால், அதை அவர் மட்டுமல்ல, அவரது ரசிகர்களாக இல்லாதவர்கள்கூட நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் விதி அதுதான் நடந்தது!

இந்த காலகட்டத்தில் இழந்த பேட்டிங் ஃபார்மை மீட்கிறேன் என்று இருந்த பேட்டிங் பார்மையும் விராட் கோலி இழந்ததுதான் நடந்தது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மட்டுமல்லாது மொத்த வாழ்க்கையிலுமே இது மிக கடினமான காலகட்டமாக அமைந்தது. தற்போது இதிலிருந்து அவர் மீண்டு வந்திருக்கிறார் இது அவருக்கும் இந்திய அணிக்கும் நல்ல விஷயம்.

தற்போது விராட் கோலியின் ஓய்வு எப்படி இருக்க வேண்டும் எந்த காலத்தில் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தான் அணியின் பிரபல வீரருமான ஷாகித் அப்ரிடி தனது விருப்பத்தையும் கருத்தையும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஷாகித் அப்ரிடி கூறும்பொழுது ” விராட் விளையாடிய விதம், அது வாழ்க்கையின் தொடக்கம், தனக்கென ஒரு பெயரை உருவாக்குவதற்கு முன்பு ஆரம்பத்தில் போராட்டம் இருந்தது. அவர் ஒரு சாம்பியன். பிராட் நீங்கள் ஓய்வு பெறும் நிலை வரும், ஆனால் அப்பொழுது நீங்கள் கிரிக்கெட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் போது வெளியே போய்விட வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நீங்கள் அணியிலிருந்து ஓரம் கட்டப்படும் பொழுது உங்கள் ஓய்வு வரக்கூடாது. நீங்கள் உயர்ந்த நிலையில் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது ஓய்வு வரவேண்டும். ஆசிய வீரர்களில் சிலருக்குத்தான் அப்படி நடந்திருக்கிறது. விராட் கோலிக்கும் அப்படியே நடக்க வேண்டும். விராட் கோலி தனது சிறந்த நிலையில் இருக்கும்பொழுது தனது ஓய்வை அறிவிக்க விரும்புவார் என்று நான் நினைக்கிறேன் ” என்று கூறியிருக்கிறார்!