36/7 கொத்தாக விழுந்த தென் ஆப்பிரிக்கா அணி .. ஆப்கான் வரலாற்று வெற்றி.. டி20 வேர்ல்ட் கப் தோல்விக்கு பதிலடி

0
427
Afghanistan

தற்போது சார்ஜாவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.தற்போது சார்ஜாவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் டெல்லி கிரேட்டர் நொய்டா மைதானத்தில் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட ஆப்கானிஸ்தான் மிகவும் ஆர்வத்துடன் இருந்தது. அந்தத் தொடரில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஐந்து நாள் போட்டியும் மழையின் காரணமாக மைதானம் சேதம் அடைந்ததால் கைவிடப்பட்டது. இதன் காரணமாக ஏமாற்றத்துடன் இருந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

கொத்தாக சரிந்த தென் ஆப்பிரிக்கா

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி முதல் 37 ரன்கள் எடுத்து முக்கிய 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, மோசமான சாதனைக்கு அருகில் இருந்தது.

இந்த நிலையில் அந்த அணியின் வியான் முல்டர் தாக்குப் பிடித்து விளையாடி 84 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து கடைசியில் வந்த பார்ச்சூன் 16 ரன்கள் எடுத்தார். ஒருவழியாக தென் ஆப்பிரிக்கா அணி 100 ரன்களை தாண்டியது. இறுதியாக 33.3 ஓவரில் 106 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வந்து வீச்சில் பரூக்கி 4, அல்லா கஸன்பர் 3, ரஷித் கான் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பதிலடி

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிரடி துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமலும், இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ரியாஸ் ஹஸன் 35 பந்தில் 16 ரன்கள் எடுத்தும் வெளியேறினார்கள். தொடர்ந்து வந்த ரஹமத் ஷா 26 பந்தில் 8 ரன், கேப்டன் ஷாகிதி 29 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : எங்க ஆஸியை இந்திய அணி வீழ்த்தும்.. இந்த 2 இந்திய வீரர்கள் கலக்குவாங்க – ஸ்டீவ் வாக் கணிப்பு

இதை தொடர்ந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட அசமத்துல்லா ஓமர்சாய் 36 பந்துகளில் 25 ரன்கள், குல்பதின் நைப் 27 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான அணி நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை 26 ஓவர்களில் எட்டி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தோல்வி அடைந்ததற்கு தற்பொழுது பதிலடிம் கொடுத்திருக்கிறது.

- Advertisement -