நான் எதுலயும் பின் வாங்க மாட்டேன்.. எனக்கும் கோலிக்கும் இடையில எல்லாம் முடிஞ்சுது – நவீன் உல் ஹக் பேட்டி

0
220

ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் தற்போது மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் டெக்ஸாஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பேசிய நவீன், கடந்த வருடம் தனக்கும் விராட் கோலிக்கும் இடையே நடைபெற்ற சம்பவம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது விராட் கோலி மற்றும் நவீன் உல்ஹக் ஆகியோருக்கிடையே சிறிய கருத்து மோதல் ஏற்பட்டது. இருப்பினும் போட்டியின் முடிவில் இரண்டு அணி வீரர்களும் கைகுலுக்க சென்றபோது அவர்கள் இருவர்களுக்கிடையேயான மோதல் மீண்டும் வெளிப்பட்டது.

அப்போது விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரிடையும் மோதல் ஏற்பட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படி இருக்கையில் கடந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய போது விராட் கோலியை சந்தித்த நவீன் உல்ஹக் நட்பு பாராட்டி பேசியது இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் நவீன் உல் ஹக் இது குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவர் விரிவாக கூறும்பொழுது “அது ஒரு சூடான விவாதமாக அமைந்தது. விராட் கோலி பெங்களூர் அணியின் முக்கிய அங்கமாக இருக்கிறார். நான் எனது பிரான்சிஸ் அணிக்காக விளையாடுகிறேன். நான் எனது நாட்டுக்காக விளையாடினாலும் அல்லது பிரான்சிஸ் அணிக்காக விளையாடினாலும் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க முயற்சிப்பேன். எந்த சூழ்நிலையிலும் நான் பின் வாங்க மாட்டேன். ஆனால் நாள் முடிவில் நாங்கள் அனைவரும் வீரர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறோம்.

நாங்கள் தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக் கொள்ளாமல் அதிலிருந்து கடந்து வந்து விட்டோம். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் நாங்கள் இருவரும் சந்தித்தபோதே அது முற்றிலும் முடிவு பெற்று விட்டது” என்று கூறியிருக்கிறார். தற்போது நவீன் உல் ஹக் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:ஐசிசி டி20 ரேங்கிங்.. டாப் 10-ல் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்.. கில் 36 இடங்கள் உயர்வு.. பவுலர்கள் சரிவு

ஆனால் இது குறித்து பேசிய இந்திய அணி வீரரான அமித் மிஸ்ரா இரண்டு கிரிக்கெட் வீரர்கள் அதிலிருந்து கடந்து விட்டதாக இருவரும் கூறினாலும் இனி விராட் கோலியை நவீன் உல்ஹக் மதிக்க மாட்டார் என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறி இருக்கிறார். போட்டியில் விராட் கோலி மற்றும் நவீன் உல்ஹக் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டபோது அமித் மிஸ்ராவும் உடன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -