“எட்டு வருடங்களுக்குப் பிறகு தோனியின் மில்லியன் டாலர் அறிவுரை பற்றி மனம் திறந்த ஆப்கானிஸ்தான் ஃபினிஷர்”!

0
719

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த டி20 போட்டிகளில் உலகெங்கிலும் உள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று ஆடி வருகின்றனர். ஐபிஎல் அணிகளும் துபாய் டி-20 லீக்கில் அணிகளை வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற யூசுப் பதான் ராபின் உத்தப்பா போன்ற முக்கிய வீரர்களும் இந்தத் தொடர்களில் பங்கேற்று ஆடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் சிறப்பான ஒரு ஆட்டத்தையே வழங்கி வருகிறது அந்த அணி உலகின் பலம் வாய்ந்த அணிகளான மேற்கிந்திய தீவுகள் இலங்கை பங்களாதேஷ் போன்ற அணிகளையும் சர்வதேச போட்டிகளில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டைச்சார்ந்த பல்வேறு வீரர்களும் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வருகின்றனர். குறிப்பாக அந்த அணியின் முகமது நபி மற்றும் ரஷித் கான் உலகின் எல்லா டி20 லீக்களிலும் விளையாடி வரும் இரண்டு வீரர்கள். மேலும் தற்போது அந்த அணியில் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் நஜிபுல்லா சத்ரான் ஃபாரூக்கி போன்ற வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் கவனத்தை எடுத்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனாக இருப்பவர் நஜீபுல்லா சத்ரான். இவர் அந்த அணியின் பினிஷர் ஆகவும் செயல்படக்கூடிய வீரர் ஆவார் . தற்போது துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச t20 கிரிக்கெட்டில் மும்பை எமிரேட்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஆன எம் எஸ் தோனி இவரது கிரிக்கெட் குரு.. இவர் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் உலகக் கோப்பை போட்டியில் தன்னுடைய குருவான தோனியை முதன் முதலில் சந்தித்து அவருடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை தற்போது பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.

இது பற்றி பேசியுள்ள நஜிபுல்லா ” மகேந்திர சிங் தோனி எப்படி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று தெரிவித்திருக்கிறார். தான் கிரிக்கெட் விளையாடிய காலங்களில் தோனி தான் தனக்கு முன்மாதிரி வீரராகவும் இருந்தார்” என்பதை தெரிவித்த நஜிபுல்லா 2015 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் போது தோனியுடன் பகிர்ந்து கொண்ட நிமிடங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இது பற்றி மேலும் பேசிய அவர் ” 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தான் நாங்கள் முதன்முதலாக பங்கேற்ற சர்வதேச உலகக் கோப்பை. அந்தப் போட்டிகளிலேயே என் குருவான எம் எஸ் தோனியை சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பின் நான் தோனியை சந்தித்தேன். அப்போது அவர் கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்கவும் மேலும் அந்த சூழ்நிலைகளில் என் மீது முழு நம்பிக்கை வைக்குமாறு எனக்கு அறிவுரை வழங்கினார். அந்த அறிவுரைகளையே நான் இன்னும் பின்பற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். மேலும் எம் எஸ் தோனியை போல் எந்த ஒரு வீரராலும் ஆட்டத்தை அற்புதமாக முடிக்க முடியாது என்றும் மும்பை எமிரேட்ஸ் சேனல் இல் அவர் தெரிவித்தார்.

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஒரு சிறந்த பினிஷராக விளங்கியவர். இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தும் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் மந்திரத்தை இன்றைய கிரிக்கெட் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் அவர் என்றால் அது மிகையாகாது.