டிவியில் ஹார்திக் பாண்டியா உருவத்திற்கு முத்தம் கொடுத்து இந்திய வெற்றியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் ரசிகர் – வீடியோ இணைப்பு!

0
65
Afghanistan

தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் நடந்து முடிந்த இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொண்ட போட்டி இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை தாண்டியும் இரு நாட்டு அணிகளை தாண்டியும் கிரிக்கெட் ரசிகர்களையும் உலக கிரிக்கெட் நாடுகளையும் ஈர்த்து வைத்திருக்கிறது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்று தற்போது ஒரு சம்பவம் நடந்து நிரூபித்து இருக்கிறது!

நேற்று முன்தினம் துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் மிக முக்கியமான பேட்ஸ்மேன் கேப்டன் பாபர் ஆசம் புவனேஸ்வர் குமாரின் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேற, பாகிஸ்தான் அணி பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து மீளமுடியாத பாகிஸ்தான் நூத்தி நாற்பத்தி ஏழு ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இலக்கு கடினமாக இல்லை என்றாலும் ஆடுகளம் தரமாகவும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு தரமாகவும் இருந்ததால் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் அதை அவ்வளவு சீக்கிரம் சுலபமாக எட்டிப் பிடிக்க முடியவில்லை. கடைசி 3 ஓவர்களுக்கு 32 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், ஹர்திக் பாண்டியா ரவிந்திர ஜடேஜா ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. 19வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய ஹர்திக் பாண்டியா, ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்க, அந்த நிலையிலும் சிறிதும் பதட்டப்படாமல் பந்தை சிக்சருக்கு விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார் ஹர்திக் பாண்டியா.

இந்தப் போட்டி இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களையும் கொண்டாட வைத்திருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் வெற்றியை கொண்டாட வைத்திருக்கிறது. பாகிஸ்தான் இந்தியா மோதிய போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒரு வீட்டில் அமர்ந்து நண்பர்கள் பார்க்கும் பொழுது, ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்ததும், அந்த ஆப்கானிஸ்தான் நண்பர்கள் வட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து சென்று தொலைக்காட்சியில் ஹர்திக் பாண்டியாவின் உருவத்திற்கு முத்தம் கொடுத்து கொண்டாடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆசியக் கோப்பையின் முதல் போட்டி இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியை 105 ரன்களுக்குள் சுருட்டி அந்த இலக்கை 10.1 ஓவர்களில் விரட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ஆப்கானிஸ்தான் பெற்று 5.176 என்ற மிகப்பெரிய 28 ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.