புதிய இளம் வீரர் சேர்ப்பு ; மூத்த வேகப்பந்துவீச்சாளர் வருகை; இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

0
22875
Ind vs Sa

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது ஆஸ்திரேலிய அணி. இந்த தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. இறுதிக்கட்ட ஓவர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இந்தத் தொடரில் பந்துவீச்சாளர் அக்சர் படேல் தொடர் நாயகன் விருது பெற்றார்!

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரண்டு தொடர்களில் விளையாட தென்ஆப்பிரிக்க அணி இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் விளையாட உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய புவனேஸ்வர் குமார் மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பகுதிநேர பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா உடலின் பின்பகுதி காயத்தால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

நேற்றுவரை மேலும் ஒரு பின்னடைவாக கோவிட் தோற்றால் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்ற வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் இருந்தது. இன்று அவர் குணமாகி விட்டார் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்ட இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பெங்காலை சேர்ந்த 27 வயதான ஷாபாஸ் அகமத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக 16 ஆட்டங்களில் 219 ரன்களையும், 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இவரது திறமையில் நம்பிக்கை வைத்து 2.40 கோடிக்கு பெங்களூர் அணி வரை வாங்கியது.

- Advertisement -

மேலும் இந்திய அணியில் நீண்ட நாட்களாக இடம் பிடித்து வரும் மும்பையைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயரையும் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் சேர்த்திருக்கிறார்கள். உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு இந்த இரண்டு தொடர்களும் ஒரு மிகப்பெரிய நல்ல பயிற்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணியை காயம் மிகவும் பாதித்து வருகிறது. உலகக் கோப்பை வரை மேற்கொண்டு வீரர்கள் காயம் அடையாமல் இருப்பது முக்கியம்!