அகமதாபாத் அணி உரிமையாளர் மீது புகார் கொடுத்தது அதானி நிறுவனம் – சிக்கலில் தவிக்கும் சிவிசி கேபிட்டல்ஸ்

Advertisement

அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைந்து விளையாடப் போகிறது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த இரண்டு அணிகளுக்கான ஏலம் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. ஏலத்தில் அகமதாபாத் அணியை 5600 கோடி ரூபாய்க்கு சிவிசி கேபிடல் நிறுவனம் கைப்பற்றியது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா நிறுவனம் 7090 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. தற்போது புதிய சிக்கலில் சிவிசி நிறுவனம் மாட்டியுள்ளது.

பெட்டிங் மற்றும் மேட்ச் பிக்சிங் விஷயத்தில் சிவிசி நிறுவனம் தலையிட்டதாக வெளிவந்த செய்தி

சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் மேட்ச் பெட்டி போன்ற சூதாட்ட விஷயங்களில் இதற்கு முன் தலையிட்டு உள்ளதாக தற்பொழுது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சட்ட விதி முறைப்படி மேட்ச் பெட்டிங் மற்றும் மேட்ச் பிக்சிங் போன்ற விஷயங்களில் தலையிடுபவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்படும். ஐபிஎல் தொடரில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு இது சம்பந்தமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடைசெய்யப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும்.

அதனடிப்படையில் சிவிசி நிறுவனம் இந்திய சட்ட விதிமுறைக்கு புறம்பான விஷயங்களில் தலையிட்டு உள்ளதாக வந்துள்ள செய்தி அனைத்து இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கூடிய விரைவில் பிசிசிஐ அந்த நிறுவனம் குறித்து விசாரணை நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

Advertisement

அகமதாபாத் அணியை கைப்பற்றும் முயற்சியில் அதானி நிறுவனம்

அதானி நிறுவனமும் அகமதாபாத் அணியை வாங்குவதற்கு ஏலத்தில் மிகப்பெரிய தொகையை பதிவு செய்திருந்தது. ஆனால் அதானி நிறுவனத்தை விட சற்று கூடுதல் தொகையை சிவிசி நிறுவனம் பதிவு செய்த காரணத்தினால் அகமதாபாத் அணி சிவிசி நிறுவனத்தின் கைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்திய சட்ட விதிமுறைக்கு புறம்பாக விஷயங்களில் சிவிசி நிறுவனம் தலையிட்டுள்ளதை தெரிந்துகொண்ட அதானி நிறுவனம் சிவிசி நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கும் முயற்சியில் உள்ளதாக தற்போது அடுத்தடுத்து தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அகமதாபாத் அணியின் உரிமை சிவிசி நிறுவனத்தின் கையை விட்டு சென்றால், அகமதாபாத் அணியை வாங்கும் முயற்சியிலும் தற்பொழுது அதானி நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Most Popular