இந்த இந்திய வீரர் சொதப்பும் போது மட்டும் கோபம் கொள்ளாதீர்கள் ! பிசிசிஐயிடம் கோரிக்கை – ஆடம் கில்கிறிஸ்ட் வேண்டுகோள்

0
1157
Adam gilchrist

கிரிக்கெட் உலகில் ஆடம் கில்கிறிஸ்ட் வருகைக்கு முன்பு, விக்கெட் கீப்பர் என்பவர் விக்கெட் கீப்பிங்கை மட்டுமே திறமையாகச் செய்தால் போதும் என்ற நிலைதான் இருந்தது. அவர்கள் பேட்டிங்கில் கட்டாய பங்களிப்பு செய்யவேண்டும் என்ற எந்த நெருக்கடியும் கிடையாது. ஆனால் அதே ஆடம் கில்கிறிஸ்ட் விக்கெட் கீப்பராய் வந்து ஆஸ்திரேலியா அணிக்கு பேட்டிங்கிலும் மிகப்பெரிய அதிரடியான பங்களிப்பைத் தர ஆரம்பித்ததும், உலகின் ஒவ்வொரு அணிகளும் ஆடம் கில்கிறிஸ்ட் போல விக்கெட் கீப்பரை தேட ஆரம்பித்தன!

இந்த வகையில் ஆடம் கில்கிறிஸ்டிற்குப் பிறகு பேட்டிங்கில் பெரிய பங்களிப்பைத் தந்த விக்கெட் கீப்பர் சங்கக்கராவும், எம்.எஸ்.தோனியும்தான். இதில் சங்கக்கரா மலையளவு ரன்களை குவித்திருக்கிறார். இவர் காலத்தில் இலங்கை அணியின் முக்கிய பேட்ஸ்மேனே இவர்தான். இவரை அடுத்து எம்.எஸ்,தோனி ஒருபடி மேலேபோய் விக்கெட் கீப்பர், பேஸ்மேன் என்பதையும் தாண்டி ஒரு கேப்டனாகவும் கோலோச்சினார்!

- Advertisement -

இவர்களுக்கு அடுத்து ஏறக்குறைய எல்லா அணிகளிலும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடம்பெறுவது தவறாது நிகழ்ந்தது. தற்போதைய கிரிக்கெட் உலகில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட், ஜோஸ் பட்லர், குயின்டன் டிகாக், மொகம்மத் ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர். இவர்களின் இடக்கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷாப் பண்ட் அதிரடியாகவும், மேட்ச் வின்னராகவும் இருப்பதால், அவரை ஆடம் கில்கிறிஸ்ட்டோடு ஒப்பிட்டு கிரிக்கெட் உலகம் பேசிவருகிறது!

தற்போது ரிஷாப் பண்ட் குறித்து அவருக்கு ஆதரவாக ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் “பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் அவருடன் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சில இன்னிங்ஸ்கள் அவர் ஸ்கோர் செய்யவில்லை என்றால், இவர்கள் அவரை கடமையாக நடத்த கூடாது. ஏனென்றால் இயற்கையான திறமையை அடக்க நான் விரும்பவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்!

மேலும் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் தொடரில் பங்கேற்றால் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள ஆடம் கில்கிறிஸ்ட் “அது அற்புதமாக இருக்கும். அது ஐபிஎல் தொடரை பாதிக்காது. அது அவர்களை பிராண்டாக மட்டுமே வளர்க்கும் என்று நினைக்கிறேன். ஆனால் சவால் என்னவென்றால், இந்தியா ஆஸ்திரேலியா செளத்ஆப்பிரிக்கா அனைவரும் அந்த நேரத்தில் தங்களின் உள்நாட்டு பருவ தொடர்களில் விளையாடுவதுதான்” என்றும் தெரிவித்தார்!

- Advertisement -