ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஜெய்ஸ்வால்; வெளியேற்றிய ரகானே; வீடியோ இணைப்பு!

0
379
Jaishwal

மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையே துலிப் டிராபி தொடரின் இறுதிப் போட்டி கோவை மைதானத்தில் நடந்து நடந்து வந்தது. போட்டியில் ஐந்தாம் நாளான இன்று மேற்கு மண்டலம் அணி தெற்கு மண்டல அணியை 294 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது!

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ரகானே தலைமையிலான மேற்கு மண்டல அணி 270 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் ஹீட் படேல் 98 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட் செய்த ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டல அணி பாபா இந்திரஜித்தின் சதத்தால் 327 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.

- Advertisement -

இதையடுத்து 2-வது இன்னிங்சை விளையாடிய மேற்கு மண்டல அணி மீண்டு எழுந்து வந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இளம் இடதுகை வீரர் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் சர்பராஸ் கான் 127 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹீட் படேல் அரைசதங்கள் அடித்தார்கள்.

இதையடுத்து 500 ரன்களுக்கு மேலான இலக்கை கொண்டு நேற்று நான்காம் நாள் பேட் செய்த தெற்கு மண்டல அணி 150 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விட்டது. இன்று போட்டியின் கடைசி மற்றும் ஐந்தாம் நாளின்போது, தெற்கு மண்டல வீரர் ரவிதேஜா பேட் செய்து கொண்டு இருக்கையில், மேற்கு மண்டல வீரர் ஜெய்ஸ்வால் அவரை ஏதோ பேசி தொந்தரவு செய்ததாக கள நடுவரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கேப்டன் ரகானே தலையிட்டு சரி செய்து வைத்தார்.

இதையடுத்து மீண்டும் ஆட்டத்தின் ஐம்பத்தி ஏழாவது ஓவரின் போது ஜெய்ஸ்வால் மீண்டும் ஒழுங்கீனமாக பேசி செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது, உடனே மேற்கு மண்டல கேப்டன் ரகானே தனது அணி வீரர் ஜெய்ஸ்வாலை பீல்டிங்கில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வெளியேறிய ஜெய்ஸ்வால் ஏழு ஓவர்களுக்கு பிறகு மீண்டும் களத்திற்கு திரும்பி வந்தார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -