பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு!

0
1558

நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மட்டும் டி20 தொடர்களில் ஆடி வருகிறது . இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது . இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் வருகின்ற பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் துவங்க இருக்கிறது .

இந்திய அணிக்காக நீண்ட காலமாக துவக்க வீரராக ஆடிய தமிழ்நாடு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரருமான முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் . இந்திய அணிக்காக இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளிலும் 17 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார் இவர் . 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரில் அறிமுகமான முரளி விஜய் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பெர்த் போட்டியில் கடைசியாக ஆடினார் . அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

- Advertisement -

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று உலகெங்கிலும் நடக்கக்கூடிய கிரிக்கெட் போட்டிகளிலும் லீக் ஆட்டங்களிலும் பங்கேற்று விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.” மேலும் ” என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் என்னை ஆதரித்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றிகள் . நான் உங்களுடன் செலவிட்ட தருணங்களை என்றென்றும் போற்றுவேன் . உங்களது ஆதரவு எனக்கு என்றுமே ஒன்றுதலாக இருந்துள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார் .

மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக 4000 ரண்களுக்கு மேல் எடுத்துள்ள விஜய் டெஸ்ட் போட்டிகளில் தான் அதிகமாக அதிகம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்காக 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 3982 ரன்கள் சேர்த்திருக்கிறார் . இதில் 12 சதங்களும் 15 அரை சதங்களும் அடங்கும் . 106 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள விஜய் 2619 ரன்களை பெற்றிருக்கிறார் . சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் இவர் ஆடி இருக்கிறார் .

தனது ஓய்வு பற்றி குறிப்பிட்டுள்ள அவர் “இன்று, மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். 2002-2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள், ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையாகும்” என்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் தனக்கு வாய்ப்பு வழங்கி ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்து இருக்கிறார் .