தற்போது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் வீரர்கள், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இடையே பிரிவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்திய வீரர்கள் செயல்படும் முறை பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதனால் கம்பீர் கடுமையாக கோபமடைந்து இருப்பதாக தெரிகிறது.
டிரெஸ்ஸிங் ரூமில் கொதித்த கம்பீர்
இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் மற்றும் கடைசி போட்டியில் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆடுகளத்தன்மை மற்றும் ஆட்ட சூழ்நிலை எதைப் பற்றியும் கவலைப்படாமல் பொறுப்பற்ற முறையில் ஆடி விக்கெட் கொடுத்தது குறித்து கம்பீர் மிகவும் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் நீங்கள் செய்தவரை எல்லாம் போதும் இனி அணி என்ன திட்டம் கொடுக்கிறதோ அதன்படி மட்டும் செயல்படுங்கள், உங்களுடைய திட்டப்படி செயல்பட்டால், அணியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்று வீரர்களிடம் கம்பீர் கூறி இருப்பதாகவும் செய்திகள் கூறுகிறது.
புஜாரா கட்டாயம் வேண்டும்
மேலும் 2018-19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் தொடரை வெல்வதற்கு மிகவும் முக்கிய காரணமாக 74 ரன் ஆவரேஜில் 521 ரன்கள் குவித்திருந்த புஜாராவை மீண்டும் கம்பீர் கேட்டதாகவும், அதற்கு இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் கம்பீர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : சிட்னி டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 3 மாற்றங்கள்?.. திரும்பும் முக்கிய வீரர்.. முழு விவரங்கள்
தற்போதைய சூழ்நிலையில் வீரர்கள் மற்றும் தேர்வுக் குழு தலைவர் ஒரு புறமாக இருப்பதாகவும், பயிற்சியாளர் தனியாக இருப்பதாகவும், அணியின் சூழ்நிலை சரியானதாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாளை மறுநாள் ஜனவரி 3ஆம் தேதி சிட்னி மைதானத்தில் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது!






