விராட் கோலியின் ஹோட்டல் அறையை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் விட்ட நபரை வெளுத்து வாங்கிய விராட்கோலி – நடிகர் நடிகைகள் ஆதரவு! வீடியோ இதோ..

0
1180

ஆஸ்திரேலியாவில் விராட் கோலி தங்கி இருந்த அறையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபரை வெளுத்து வாங்கியுள்ளார் விராட் கோலி.

டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மைதானத்திற்கு அருகே உள்ள ஹோட்டல் அறையில் தங்கி தினமும் பயிற்சி செய்து போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அக்டோபர் 31ஆம் தேதி நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.

இரு தினங்களுக்கு முன்பு பெர்த் சென்ற இந்திய வீரர்கள் மைதானத்திற்கு அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கே விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அறையில் அவர் தனது பொருட்களை மற்றும் ஷூக்களை எவ்வாறு அடுக்கி வைத்திருக்கிறார் என்று அறையில் வேலை செய்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

விராட் கோலி அறையை இப்படி வைத்திருக்கிறாரா? என பலரும் ஆர்வத்துடன் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்துள்ளனர். இது விராட் கோலியின் கண்ணில் பட்டுள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்த விராட் கோலி, “எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எனக்கு என்று தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் இருக்கிறது. அதை பொதுவெளியில் இதுபோன்று வீடியோ எடுத்து தெரிவிப்பது அநாகரீகம்.”என கடுமையாக கண்டித்து பதில் கொடுத்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,

“ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களை தெரிந்து கொள்வது மற்றும் நேரில் சந்தித்து அவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்வது என விருப்பமானதை செய்வதை நான் ஒப்புக் கொள்வேன். ஆனால் இந்த வீடியோவில் இருப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தனிப்பட்ட வாழ்க்கைக்கு முற்றிலும் முரணாக இது இருக்கிறது. எனது ஹோட்டலின் தனி அறையில் நான் பிரைவேசி எதிர்பார்க்கவில்லை என்றால், வேறு எங்கே எனக்கு பிரைவேசி இருக்கும். இது எனக்கு ஓகே இல்லை. இதுபோன்று தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது மற்றும் ரசிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.” என பதிவிட்டு இருந்தார்..