டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகிறாரா ரோகித் சர்மா? மாற்று வீரராக இவர் வருவதற்கு வாய்ப்பு!

0
5447

கட்டை விரல் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ரோகித் சர்மா விலகுவதற்கு வாய்ப்பு இருப்பதால் மாற்று வீரராக வருவதற்கு இளம் வீரரின் பெயர் அடிபடுகிறது.

வங்கதேசம் அணியுடன் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரோகித் சர்மா பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் கட்டைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக போட்டியில் இருந்து வெளியேறி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

- Advertisement -

தற்போது வரை கையில் எந்தவித எலும்பு முறிவும் இல்லை. மூட்டு பகுதி சிறிது விலகி இருப்பதால் வீக்கம் அதிகமாக இருக்கிறது என தெரிய வந்திருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் கடைசியாக பேட்டிங்கில் இறங்கி 28 பந்துகளில் 51 ரன்கள் விளாசி கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி எடுத்துச் சென்றார்.

இவரது உடல் நலம் கருதி மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். உடனடியாக மும்பை சென்று மருத்துவரிடமும் ஆலோசிக்க உள்ளார் என்ற தகவலை ராகுல் டிராவிட் வெளியிட்டார்.

டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது என்பதால், மாற்று வீரராக யாரை உள்ள எழுத்து வரலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

- Advertisement -

தற்போது இந்தியா ஏ அணி, வங்கதேசம் ஏ அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடியதில், இரண்டிலும் சதம் அடித்து அசத்திய இந்தியா ஏ கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக உள்ளே எடுத்து வரப்பட உள்ளார் என்ற தகவல்கள் வந்திருக்கிறது.

மிகச் சிறந்த பார்மில் இருக்கும் துவக்க வீரரான அபிமன்யு ஈஸ்வரன் உள்ளூர் போட்டிகளிலும் அசத்தினார். அதன் பிறகு தற்போது இந்தியா ஏ அணிக்காகவும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதால் அணி நிர்வாகம் இத்தகைய முடிவு எடுத்திருக்கிறது.

முகமது சமி காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிய வந்திருக்கிறது. அவருக்கு மாற்று வீரராக உம்ரான் மாலிக் அல்லது முகேஷ் சவுத்ரி இருவரில் ஒருவர் உள்ளே எடுத்து வரப்படலாம் என்ற தகவல்களும் வந்திருக்கின்றன.