இன்று ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சனத் ஜெயசூர்யாவின் 17 வருட ஆசியக் கோப்பை சாதனை ஒன்றை உடைத்திருக்கிறார்.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் மொத்தம் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. காயத்தின் காரணமாக கேப்டன் லிட்டன் தாஸ் விளையாட வில்லை. இந்திய தரப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இன்றைய போட்டிக்கான ஆடுகளத்தில் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக முதல் மூன்று ஓவர்களில் இந்திய அணி 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதற்கு அடுத்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்த மூன்று ஓவரில் 55 ரன்கள் எடுத்து மொத்தம் பவர் பிளேவில் 72 ரன்கள் உடன் முடித்தார்கள்.
ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 25 பந்தில் தொடர்ந்து இரண்டாவது அரை சதத்தை அடித்து அசத்தினார். இவருடன் இணைந்து அற்புதமான முறையில் ஒத்துழைப்பு தந்து விளையாடிய துணை கேப்டன் கில் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய அபிஷேக் ஷர்மா மொத்தம் 37 பந்துகளை சந்தித்து விளையாடி 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். மேலும் ஒரு ஆசிய கோப்பை தொடரில் அதிக சித்தர்கள் அடித்திருந்த சனத் ஜெயசூர்யாவின் 17 வருட சாதனையை முறியடித்தார். இந்திய அணி இந்த போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் வீரர்களின் மோசமான கொண்டாட்டம்.. முதல் முறையாக தரப்பட்டுள்ள விளக்கம் – இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு
ஒரு ஆசிய கோப்பையில் அதிக சிக்ஸர்கள்:
15- அபிஷேக் சர்மா (2025)
14- சனத் ஜெயசூர்யா (2008)
13 – ரோஹித் சர்மா (2018)
12- ஷாஹித் அப்ரிடி (2010)
12-ஆர் குர்பாஸ் (2022)