இந்திய உள்நாட்டு டி20 தொடர் சையத் முஸ்டாக் அலி டிராபியில் பஞ்சாப் அணியின் கேப்டன் மேகலயா அணிக்கு எதிராக அதிவேகமாக சதம் அடித்து அபிஷேக் ஷர்மா இரண்டு புதிய சாதனைகளை படைத்திருக்கிறார்.
தற்போது இந்தியாவில் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி டிராபி நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் ஷர்மா உலக அளவில் மற்றும் இந்திய அளவில் இரண்டு புதிய சாதனைகளை அதிவேகமாக சதம் அடித்து உருவாக்கி இருக்கிறார்.
அதிர்ஷ்டத்தில் தப்பித்த மேகலயா
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த காரணத்தினால் மேகலயா அணி தப்பியது என்று கூறலாம். முதலில் பேட்டிங் செய்ய வந்த அந்த அணிக்கு விக்கெட் கீப்பர் அர்பித் பட்டேவரா 31 பந்துகளில் 31 ரன்கள், லாரி சங்மா 16 பந்தில் 21 ரன்கள், யோகேஷ் திவாரி 17 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்கள்.
இறுதியில் மேகலயா அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் கேப்டன் அபிஷேக் ஷர்மா மற்றும் ரமன்தீப் சிங் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். அஸ்வினி குமார், ஹர்பரித் பிரார் மற்றும் தலிவால் மூவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இரண்டு சாதனை படைத்த அபிஷேக் ஷர்மா
இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் 7 பந்தில் 6 ரன், சலீல் அரோரா 2 பந்தில் 1 ரன், தலிவால் 15 பந்தில் 22 ரன், ரமன்தீப் சிங் ஆட்டம் இழக்காமல் 4 பந்தில் 8 ரன் எடுத்தார்கள். ஆனால் ஒரு முனையில் நின்ற துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 28 பந்தில் அதிரடியாக சதம் அடித்து, 29 பந்தில் 8 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி ஒன்பது புள்ளி மூன்று ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 28 பந்தில் சதம் அடித்ததால் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரராக அபிஷேக் ஷர்மா உர்வில் படேல் சாதனையை சமன் செய்தார். மேலும் உலக அளவில் எஸ்டோனியா வீரர் சாகில் சவுகான் 27 பந்தில் சதம் அடித்ததற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிவேக சதமாக இது பதிவாகியது.
இதையும் படிங்க : 20 ஓவர் 349 ரன்.. உலக சாதனை படைத்த பாண்டியா பிரதர்ஸ் டீம்.. மெகா வித்தியாச வெற்றி.. SMAT 2024
அதிவேக டி20 சதம் அடித்த இந்தியர்கள்
அபிஷேக் ஷர்மா – 28 பந்துகள்
உர்வில் படேல் – 28 பந்துகள்
ரிஷப் பண்ட் – 32 பந்துகள்
ரோஹித் சர்மா – 35 பந்துகள்
உர்வில் படேல் – 36 பந்துகள்