ஐபிஎல் 2025

ஆர்சிபி அந்த வீரரை வாங்கி இருந்தா தோத்து போய் இருப்பாங்க.. ஏபி டிவில்லியர்ஸ் கருத்து.. அபினவ் முகுந்த் தகவல்

இந்தியா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்காக விளையாடியிருக்கும் அபினவ் முகுந்த் ஏபி டிவில்லியர்ஸ் தன்னிடம் ஒரு வீரரை ஆர்சிபி வாங்கி இருந்தால் தோல்வி அடைந்திருக்கும் என்று கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஆர்சிபி அணி முதல்முறையாக தங்கள் வரலாற்றில் வென்றது. மேலும் ஆர்சிபி எனில் இந்த முறை 9 தனித்தனி வீரர்கள் ஆட்டநாயகன் விருது வென்று இருக்கிறார்கள். வாங்கப்பட்ட அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள்.

ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்த கருத்து

ஐபிஎல் தொடருக்கு நடுவே ஒவ்வொரு வீரர்களையும் வாங்கியது ஏன் என்பது குறித்து ஆர்.சி.பி அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டிருந்தது. இதன் மூலம் அவர்கள் எவ்வளவு தெளிவாக திட்டமிட்டு இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதே சமயத்தில் இவர்கள் ஏலத்தில் வெங்கடேஷ் ஐயருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 23.50 கோடி ரூபாய் வரை ஏலத்திற்கு சென்றார்கள். பிறகு அவரை வாங்காமல் வெளியில் வந்தார்கள். இதற்கு பிறகு கேசில்வுட், பில் சால்ட் மற்றும் ஜிதேஷ் சர்மா போன்ற மிக முக்கியமான வீரர்களை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏபி டிவில்லியர்ஸ் உடைத்துச் சொன்னார்

இதுகுறித்து பேசி உள்ள அபினவ் முகுந்த் கூறும் பொழுது ” நான் ஏபி டிவில்லியர்ஸ் உடன் இருந்த பொழுது, ஐபிஎல் தொடரில் எந்த ஜாம்பவானும் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னார். அது ஐபிஎல் தொடரில் தனக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டதாக கூறினார். தான் அதிகமான சம்பளம் வாங்கியதாக உணர்ந்ததாக தெரிவித்தார். அதே சமயத்தில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியில் எந்த ஒரு வீரரும் ஏலத்தில் 15 கோடியை தாண்டவில்லை என்று சுட்டிக் காட்டினார்”

இதையும் படிங்க : இங்கி முதல் டெஸ்ட்.. இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு.. புதிய அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்

“பின்னோக்கி பார்க்கும் பொழுது வெங்கடேஷ் ஐயரை வாங்காதது நல்லது என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். ஏனென்றால் அவருக்கு பிறகு தான் மிக முக்கியமான வீரர்களை அவர்கள் வாங்கினார்கள். இதற்குப் பிறகு அவர்கள் தங்களுடைய திட்டத்தில் தெளிவாக இருந்து புவனேஸ்வர் குமாருக்காக சேமித்த பணத்தை வைத்துக்கொண்டு தேவையான எல்லா வீரர்களையும் வாங்கி விட்டார்கள்” என்று கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by