இவங்க 2 பேருக்கும் அவ்வளவு பணம் தேவையா? ஏலத்திலே பெஸ்ட் என்றால் இவங்க 2 அணிகள் தான்

0
998

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும், பேட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் சென்றார்கள்.

  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஏ பி டிவில்லியர்ஸ், பேட் கம்மின்ஸ்சும் மிச்சம் ஸ்டார்க்கும் நல்ல பவுலர்கள் தான். ஆனால் இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை தேவையா என்று யோசிக்க தோன்றுவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இது குறித்து பேசிய அவர் பந்து வீச்சாளர்களுக்கான தேவை ஐபிஎல் தொடரில் அதிகம் இருப்பதாகவும் இப்படி ஒரு சூழல் ஏற்படுவதால் தான் பௌலர்கள் அதிக விலைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த மினி ஏலத்திலே சிறந்து செயல்பட்டவர்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான் என்றும் அவர் பாராட்டினார். இந்த ஏலத்தில் அவர்கள் குறைவான விலையில் பல திறமையான வீரர்களை வாங்கி விட்டதாக கூறியிருக்கிறார்.

அறிவை பயன்படுத்தி இவ்விரு அணி நிர்வாகிகளும் ஏலத்தில் வீரர்களை எடுத்ததாகவும் மற்றவர்கள் எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வீரர்களை எடுத்து விட்டார்கள் என தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஏலத்தில் குறைவான விலையில் நிறைய வீரர்களை வாங்கிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மதுசங்கா, கோயிட்சே, துஷாந்த் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை குறைந்த விலைக்கு அவர்கள் வாங்கி விட்டதாக டிவில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி தென்னாப்பிரிக்கா வீரர் கோயிட்டே இலங்கை வீரர் மதுசங்கா மற்றும் துஷாராவுக்கு சேர்த்து மொத்தமாகவே 15 கோடி ரூபாய் தான் செலவு செய்திருப்பதாகவும் ஆனால் ஒரு வீரருக்கு மற்ற அணிகள் 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பதாகவும் டிவில்லியர்ஸ் சாடி இருக்கிறார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அனுபவிக்க வீரர்களான முகமது நபி மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியவர்களை குறைந்த விலைக்கு எடுத்து விட்டதாகவும் இதன் மூலம் அவர்கள் பல நன்மைகளை பெறுவார்கள் என்றும் ஏபி டிவில்லியர்ஸ் பாராட்டி இருக்கிறார்.

குறிப்பாக கோயிட்சே மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய வீரராக வருவார் என்றும் அவர் பாராட்டுகிறார்.கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கோயிட்சே பந்துவீச்சை நான் எதிர்கொண்ட போது அவர் எனக்கு நெருக்கடியை கொடுத்ததாகவும் நினைவுகூர்ந்து உள்ளார்.