விராட் கோலியின் 71வது சதத்தை காண விரும்பும் ரசிகர்களுக்கு டிவில்லியர்ஸ் அளித்த அருமையான பதில்

0
11826
Virat Kohli and Ab de Villiers

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ். கிரீசுக்குள் நின்றுகொண்டு பம்பரம் போல் சுழன்று சுழன்று ஆடும் டிவில்லியர்ஸை ரசிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் இருக்க முடியாது. தென்ஆப்பிரிக்கா வீரர் என்றாலும் அவருக்கு இந்தியாவிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. காரணம் IPL தொடரில் இவர் விளையாடும் பெங்களூரு அணி. இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் இணைந்து ஆடுவதால் இரண்டு உலகத்தர வீரர்களை பார்க்க எப்போதும் ரசிகர்கள் ஆவலாக இருப்பது உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து அமைக்கும் பார்ட்னர்ஷிப்புகள் எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு கலக்கத்தை கொடுக்கும்.

களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியேயும் விராட் கோலியும், டிவில்லியர்ஸும் நல்ல நட்பு பாராட்டி வருகிறார்கள். கடந்த முறை விராட்கோலி ரன்கள் எடுப்பதில் தடுமாறும் போது டிவிலியர்ஸ் தான் தன்னை வழி நடத்தினார் என்று விராட் கோலி கூறினான். தற்போது மீண்டும் டிவிலியர்ஸின் வழிநடத்துதல் கோலிக்கு தேவைப்படுகிறது. காரணம் என்னவென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி சதம் எதுவும் அடிக்காமல் இருக்கிறார். குறுகிய காலத்திலேயே 70 சதங்களை அடித்த இவரால் தற்போது இரண்டு வருடங்களாக 71ஆவது சதத்தை அடிக்க முடியாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் உலகின் முன்னணி ஷாப்பிங் நிறுவனமான மிந்த்ரா ட்விட்டரில் தற்போது நீங்கள் என்ன வாங்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்பது போல ஒரு ட்வீட்டை வெளியிட்டது. அதற்கு ரசிகர் ஒருவர் விராட் கோலியின் 71வது சதமும், ஏபி டிவில்லியர்ஸ் இடமிருந்து ஒரு ரிப்ளையும் என்று பதில் அளித்து இருந்தார். சமூக வலைதளங்களில் தற்போது டிவிலியர்ஸ் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்புகூட தன்னுடைய வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகரை பாராட்டியிருந்தார் டிவிலியர்ஸ்.

டிவில்லியர்ஸ் ரசிகரின் இந்த ட்வீட்டை பார்த்ததும் உடனே அவருக்கு ரிப்ளை செய்தார். அந்த அறிக்கையில் உங்களின் ஒரு ஆசை முடிந்துவிட்டது, மற்றொன்றிற்காக நானும் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் டிவில்லியர்ஸ். ரசிகர்களோடு இணைந்து ஒரு முன்னணி கிரிக்கெட் வீரரும் விராட் கோலியின் அடுத்த சதத்திற்கு காத்திருப்பது, எந்த அளவு விராத் கோலியின் எழுச்சிக்கு கிரிக்கெட் உலகம் காத்திருக்கிறது என்பதை நன்கு உணர்த்துகிறது.