கவர் டிரைவ் ஷாட் என்றால் இந்த 2 வீரர்கள்தான் மாஸ்டர்கள் – ஆரோன் பின்ச் விளக்கம்

0
10448
Aaron Finch

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் பயோ பபுளில் தங்க முடியாத காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். கொல்கத்தா அணி நிர்வாகம் அவருக்கு மாற்று வீரராக, ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்சை தேர்வு செய்தது. ஒரு கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ஆரோன் பின்ச்சை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை மிக சிறப்பாக ஆரோன் பின்ச் வழிநடத்தினார். ஆஸ்திரேலிய அணி முதல் டி20 உலக கோப்பை தொடரில் கடந்த ஆண்டு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளைவ்பொருத்தவரையில் 88 போட்டிகளில் விளையாடி 2686 ரன்கள் இதுவரை ஆரோன் பின்ச் குவித்திருக்கிறார். அதேபோல 87 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2000 ரன்களை அவர் குவித்திருக்கிறார்.

- Advertisement -
ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆரோன் பின்ச்

கொல்கத்தா அணி ரசிகர்கள் ஒரு கேள்வி பதில் உரையாடலை ஆரோன் பின்ச்சிடம் நிகழ்த்தினார். அதில் தற்பொழுது உள்ள கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மத்தியில் கவர் டிரைவ்வை பொறுத்தவரையில் மிக சிறப்பாக விளையாடும் வீரர் யார் என்று கேட்டனர். அதற்கு ஆரோன் பின்ச் தற்பொழுது உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவர் டிரைவ் ஷாட்டை மிகவும் அற்புதமாக விளையாடுவது விராட் கோலி மற்றும் பாபர் அசாம் என்று பதிலளித்தார்.

விராட் கோலியின் கவர் டிரைவ் குறித்து எந்தவித விளக்கமும் தேவையில்லை. அவ்வளவு நேர்த்தியாக விளையாடுவார். விராட் கோலிக்கு சற்றும் குறைந்த பட்சத்தில் பாபர் அசாமும் கவர் டிரைவ் ஷாட்டை மிக அற்புதமாக விளையாடுவார்

ஏபி டிவில்லியர்ஸ்சை பார்த்து நான் காப்பி அடித்து இருக்கிறேன்

கடந்த ஆண்டு சக பாகிஸ்தான் அணி வீரரான இமாம்-உல்-ஹக் உடன் பாபர் அசாம் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடலில் ” தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸிடமிருந்து கவர் டிரைவ் ஷாட் விளையாடுவதில் உத்வேகம் பெற்றதாக பாபர் அசாம் தெரிவித்திருந்தார்”.

- Advertisement -

ஏபி டி வில்லியர்ஸைப் பார்த்து நான் கவர் டிரைவ் அடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன், அவருடைய கவர் டிரைவ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நேரத்தில் அவர் அடிக்கும் கவர் டிரைவ் ஷாட்களை நான் காப்பி அடித்து இருக்கிறேன் என்றும் கூறினார்.