ஜடேஜா விசயத்தில் முட்டாள் தனமான முடிவை எடுக்கும் இந்திய அணி..முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

0
152

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி நிர்வாகம் சில தவறான முடிவை எடுத்து வருகிறது. குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் பிறகு எட்டு நாட்களுக்கு மேல் ஓய்வு இருந்த நிலையில் முஹம்மது சமியை மூன்றாவது போட்டியில் இந்திய அணி விளையாட வைக்காமல் இருந்தது.

- Advertisement -

அதேபோன்று கே எல் ராகுலுக்கு தொடர்ந்து தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கி வந்தது. தற்போது ஜடேஜா விஷயத்தில் முட்டாள்தனமான முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்திருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ஜடஜாவை பேட்டிங் வரிசையில் நம்பர் ஐந்தாவது வீரராக இந்திய அணி நிர்வாகம் களமிறக்குவது சுவாரஸ்யமான  முடிவாக இருக்கிறது.

ஆனால் இது எந்த பயனையும் ஏற்படுத்த போவதில்லை. ஏனென்றால் இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நீங்கள் அக்சர் பட்டேலை சேர்க்க மாட்டீர்கள். இதனால் ஜடேஜா அவருடைய இடத்தில் தான் விளையாட வேண்டும்.

தற்போது எதற்காக அவரை நடு வரிசையில் விளையாட வைக்கிறீர்கள் என்று அவர் கூறியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக ஜடேஜாவை இந்திய அணி நிர்வாகம் களம் இறக்கிய நிலையில் அவர் பெரிய தாக்கத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் சொற்ப ரன்களின் ஆட்டம் இழந்து விடுகிறார்.

- Advertisement -

ரிஷப் பந்த் இல்லாத நிலையில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் நடு வரிசையில் விளையாட வைக்கும் இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இல்லை. இதனை தான் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து இருக்கிறார். இதேபோன்று விராட் கோலி குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஆடுகளத்தின் தன்மையை பார்த்த பிறகும் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்திருப்பது தான் இந்த ஆட்டத்தில் மிகவும் சிறப்பான அம்சம்.

எனக்கு என்னவோ விராட் கோலி இந்த அரை சதத்தை இரட்டை சதமாக மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி விராட் கோலி செய்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட முன்னிலை பெற்று விடும். இதனால் இந்தியா வெற்றி பெற கூட வாய்ப்பு இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்திய அணி தற்போது வரை ஆஸ்திரேலியா விட 191 ரன்கள் பின் தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது