ஐபிஎல்

சிஎஸ்கே அணிக்கு இப்போது பெரிய பின்னடைவு.. இந்த வேலையை செய்ய அவர்களிடம் யாருமே இல்லை – ஆகாஷ் சோப்ரா

19வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனுக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை அணிக்கு முக்கிய வீரர் ஒருவர் வெளியேறி இருப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பேட்டிங் மந்தமாக இருந்த நிலையில் அதை உடனடியாக சரி செய்யும் விதமாக அதிரடியான வீரர்களை இடத்தில் எடுத்தது மட்டுமல்லாமல் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கி பேட்டிங் வரிசையை பலமாக கட்டமைத்தது. பந்து வீச்சு பலம் பொருந்தி இருந்தாலும் இறுதி கட்ட ஓவர்களை வீசும் பத்திரனா உடல் தகுதி பிரச்சனைகள் காரணமாக அணியில் இருந்து கடந்த சீசனில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் நாதன் எல்லீஸ் அந்த வேலையை சரி செய்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று வந்த தகவலின் படி காயம் காரணமாக அவர் இந்த முழு சீசனிலும் இருந்து வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலாக டெத் பௌலிங்கை யார் சரி செய்வர் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “நாதன் எல்லிஸ் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டால் சிஎஸ்கே அணியின் டெத் பௌலிங்கை யார் வீசுவார்கள். பதிரானாவை ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே விடுவித்தது. அவரது உடல் தகுதி பிரச்சனைகள் கருத்தில் கொண்டு சிஎஸ்கே இந்த முடிவை எடுத்தது என்று கூறலாம். மேலும் அவர் கேகேஆர் அணிக்கு முழுமையாக விளையாடுவாரா? என்பதும் தெரியாது. இதனால் சிஎஸ்கே எடுத்த முடிவு சரி என்று வைத்துக் கொள்ளலாம்.

இருப்பினும் அவர்கள் பதிராணாவை விடுவித்த போது நாதன் எல்லீஸ் இதை கவனித்துக் கொள்வார் என்று கவனம் அவர் மீது திரும்பியது. இப்போது அவரும் இல்லையென்றால் சிஎஸ்கே அணிக்கு இந்த வேலையை யார் செய்வார்கள். சிஎஸ்கே அணியில் மேட் ஹென்றி, ஜேமி ஓவர்டன், முகேஷ் சௌத்ரி, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ் மற்றும் குர்ஜப்நீத் சிங் ஆகியோர் உள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் டெத் பௌலிங் வீசுபவர்கள் கிடையாது. எனவே இது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: CSKIpl2026