ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு தவறான தீர்ப்பு; அரை இறுதிக்கு வந்தது பாகிஸ்தான்!

0
7552
Pak vs Ban

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று மொத்தம் மூன்று ஆட்டங்கள். முதல் ஆட்டத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி அளித்து தென் ஆப்பிரிக்கா அணியை உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேற்றியது!

இதனால் பாகிஸ்தான் பங்களாதேஷ் மோதிய ஆட்டத்தில் யார் வெல்கிறார்களோ அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள் என்ற நிலை திடீரென உருவானது. இதனால் இவர்கள் மோதிக் கொள்ளும் ஆட்டம் முக்கியத்துவம் கொண்டதாக மாறியது!

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய, லிட்டன் தாஸ் சீக்கிரத்தில் வெளியேறினாலும், சாண்டோ மற்றும் சௌமியா சர்க்கார் இரண்டாவது விக்கட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பத்து ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் என்று வலிமையாக இருந்தார்கள்.

இந்த நிலையில் சதாப் கான் வீசிய பத்தாவது ஓவரின் நான்காவது பந்தில் 20 ரன்னில் சௌமியா சர்க்கார் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து அனுபவ வீரரும் அணியின் கேப்டனமான சகிப் அல் ஹசன் உள்ளே வர, அவர் முதல் பந்தை இறங்கி வந்து தடுக்க போக, வந்து பேட்டில் பட்டு காலில் பட்டது. இதற்கு அவுட் அப்பில் கேட்க, நடுவர் அவுட்தர, மூன்றாவது நடுவரிடம் சென்றார் சகிப் அல் ஹசன்…

மூன்றாவது நடுவர் நேரம் எடுத்து மீண்டும் மீண்டும் பார்த்தும், அவுட் இல்லாத ஒரு விஷயத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அவுட் தந்தார். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாத சகிப் புலம்பியபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார். இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணியால் நிமிரவே முடியவில்லை.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான அணி மிக எளிதாக பதினோரு பந்துகள் மீதம் இருக்க பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு ஆச்சரியப்படும் விதமாக நுழைந்தது. தற்பொழுது இந்த அவுட் விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது!