அதிர்ஷ்மில்லாத 11 இந்திய கிரிக்கெட் வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட அணி

0
6057
Subramaniam Badrinath and Wasim Jaffer

இந்தியாவில் திறமைக்கு பற்றாக்குறை கிடையாது. ஒரு அணியில் 11 வீரர்கள் மட்டுமே ஆட முடியும். இதனால் திறமை இருந்தும் பல வீரர்கள் வாய்ப்புக் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். ஒரு சில வீரர்களுக்கு ஒரிரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்புக் கிடைக்கும். அதன் பின்னர் அவர்களின் இருப்பு தெரியாமல் போய்விடும். ஒரு வீரர் 2 அல்லது 3 போட்டிகளில் சொதப்பினால், அவருக்கு பதில் மாற்று வீரர் ஆடுவார்.

ஆனால் அதிர்ஷ்டமுள்ள ஒரு சில வீரர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்புக் கிடைக்கும். அதை அவர்கள் சரியாக பயன்படுத்தி அணியில் தக்கவைத்துக் கொள்ளப்படுவர். ஆதலால், தேசிய அணியில் ஆடுவதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. இந்தக் கட்டுரையில், அதிர்ஷ்டமில்லா வீரர்களை வைத்து ஓர் அணியை நாங்கள் உருவாக்கி உள்ளோம். அதைப் பின்வருமாறு பார்ப்போம்.

ஒப்பனர்கள் – ஷெல்டன் ஜாக்சன் ( விக்கெட் கீப்பர் ) & வாசிம் ஜாபர் ( கேப்டன் )

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், அனைத்து ஃபார்மட்டிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டதை வெளிப்படுத்தினார். உள்ளூர் போட்டிகளிலும், ஷெல்டன் ஜாக்சன் மிக அற்புதமாக ஆடினார். ஆனால் இவருக்கு சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பு ஒரு முறை கூட கிடைக்கவில்லை.

அடுத்த ஒப்பனர் வாசிம் ஜாபர். இவர் இந்திய அணிக்காக வெறும் 31 டெஸ்ட்கள் மட்டுமே ஆடியுள்ளார். இவர் ஃபார்ம் அவுட் ஆகும் போது இவரை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளவில்லை. உள்நாட்டு போட்டிகளில் இவரைப் போல ரன்களை குவித்த வீரர்கள் யாரும் இல்லை. இவரது திறமையை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள தவறியது.

மிடில் ஆர்டர் – சுப்ரமணியம் பத்ரிநாத், அமோல் முழும்தர், கருண் நாயர் மற்றும் மனோஜ் திவாரி

தமிழக வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத், ரஞ்சித் தொடரில் மிகச் சிறப்பாக பங்காற்றினார். அதன் பின்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல முக்கிய ரன்களை விளாசினார். ஐ.பி.எல் மூலம் அவருக்கு தேசிய அணியில் ஆட அழைப்பு வந்தது. ஓரிரு போட்டிகளுக்கு பின் அவர் அணியில் இடம்பெறவில்லை. அடுத்ததாக அமோல் முழும்தர். இவரும் ரஞ்சித் தொடரில் பல சாதனைகள் படைத்துள்ளார். ஆனால் இவருக்கும் பெரிதாக எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் கருண் நாயர் என்றால் நம் அனைவர் நினைவுக்கும் வருவது அவரின் முச்சதம் தான். டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக, தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டு ஆடினார். இருப்பினும், அதற்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மனோஜ் திவாரியும் இவர்களைப் போல, திறமை வாய்ந்த வீரர் தான். ஐ.பி.எலிலும் அவர் நன்றாகவே ஆடியுள்ளார். ஆனால் சர்வதேச அளவில் பெரிதாக அவரால் உயர முடியவில்லை.

ஆல்ரவுண்டர்கள் – அபிஷேக் நாயர் & ஜலஜ் சக்சேனா

இவரும் உள்நாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தன் திறனை வெளிப்படுத்தி அனைவரையும் கவார்ந்தார். ஆனால் இவருக்கு தேசிய அணியில் ஆடும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டரான ஜலஜ் சக்சேனா, முதல் தர போட்டிகளில் அபார சாதனைகள் படைத்துள்ளார். ஆனால் இவருக்கு ஐ.பி.எலில் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீண்டகால காத்திருப்புக்குப் பின் தற்போது தான் பஞ்சாப் அணியில் அறிமுகமாகினார்.

பந்துவீச்சாளர்கள் – அமித் மிஷ்ரா, ஜெயதேவ் உனத்கட் மற்றும் பங்கஜ் சிங்

இந்தியன் பிரீமியர் லீக்கில் 150க்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார் அமித் மிஷ்ரா. மேலும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்பின்னர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆடினார். ஆனால் அவரால் தொடர்ந்து இந்திய அணியில் தங்க முடியவில்லை.

ரஞ்சித் தொடர் & மற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடினார் உனத்கட். 2017 ஐ.பி.எலில் புனே அணியில் தன் முழு திறனையும் வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வந்தார். 2/3 போட்டிகளுக்கு பின் அவரை இந்திய அணி தேர்தெடுக்கவில்லை. மற்றொரு திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் பங்கஜ் சிங். காயங்கள் பல, அவரின் கிரிக்கெட் வாழ்கையை முடித்துவிட்டது.