ஆப்கானிஸ்தானை பொட்டலம் கட்டி டார்கெட்டை 16 ஓவரில் எட்டி தொடரைக் கைப்பற்றியது இலங்கை!

0
533
SlvsAfg

ஆப்கானிஸ்தான் அணி இலங்கை நாட்டிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது!

இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்திருக்க, இரண்டாவது போட்டியில் இலங்கை வென்று தொடரைச் சமன் செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரை யாருக்கு என்று நிர்ணயிக்கும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வது என்று தீர்மானித்தது. ஆனால் பின்பு இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக ஆப்கானிஸ்தான் கேப்டன் வருத்தப்பட்டு இருப்பார்.

ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் அனுபவ வீரர் முகமது நபி மட்டும் 23 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இலங்கை அணியின் தரப்பில் 9 ஓவர்கள் பந்து வீசிய 63 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர் சமீரா வீழ்த்தினார். இன்னொரு பக்கத்தில் இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹசரங்கா 4.2 ஓவர்கள் பந்து வீசி, ஒரு மெய்டன் செய்து, 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

இலங்கையின் பேட்டிங்கில் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 34 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் திமுக கருணரத்தினே 45 பந்துகளில் 7 பவுண்டரி உடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.