மைதானத்தில் புகுந்த பாம்பு ; இந்தியா தென் ஆப்ரிக்கா ஆட்டத்தில் பரபரப்பு!

0
1196
Ind vs Sa

தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது.

இந்த டி20 தொடரின் முதல் போட்டி கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இதையடுத்து இன்று அசாம் மாநிலம் கவுகாத்தி நகரின் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற தென்ஆப்பிரிக்க கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

இந்திய அணிக்கு துவக்கம் தர களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை ஆரம்ப முதலே வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக கடந்த ஆட்டத்தில் மிகவும் மெதுவாக விளையாடிய கே எல் ராகுல் இந்த ஆட்டத்தில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து முதல் ஆறு பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் 57 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த சமயத்தில் திடீரென ஆட்டம் தடைபட்டது. தொலைக்காட்சியில் மைதானத்தில் காட்டப்பட்ட இடத்தில் ஒரு பாம்பு ஒன்று வேகமாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது. பின்பு அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து மைதான ஊழியர்கள் பாம்பை பிடிப்பதற்காக வந்து, அதைப் பிடித்து ஒரு பாக்கெட்டில் அடைத்து எடுத்துச் சென்ற பின்பு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இதனால் ஒரு சிறிது நேரம் ஒரு பரபரப்பும் உருவாகி ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டு பின்பு துவங்கியது.

- Advertisement -