2015ஆம் ஆண்டைப் போல் மீண்டும் மொத்த இங்கிலாந்து அணியையும் மாற்ற வேண்டும் – விரக்தியில் கேப்டன் ஜோ ரூட்

0
1689
Joe Root

இங்கிலாந்து அணி தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதன் சொந்த ஊரிலேயே இங்கிலாந்து இந்த தொடரை சந்தித்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இதன் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை பதிவு செய்து தொடரை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. கொஞ்சம் கூட ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பரிதாபமாக 3-வது டெஸ்ட் போட்டியை இன்று இங்கிலாந்து இழந்தது. தனியாளாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் போராடிய போதும் அவருக்கு பக்கபலமாக மற்ற வீரர்கள் விளையாடாத காரணத்தினால் இங்கிலாந்து தோல்வி பெற்றது. ஒரு வருடத்தில் அதிக பட்சமாக எடுக்கப்பட்ட ரன்கள் வரிசையில் ஜோ ரூட் இரண்டாமிடம் பெற்றும் இங்கிலாந்து அணி இந்த ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது.

இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு காணப்பட்டது. ரூட் 1700 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தாலும் அதற்கு அடுத்தபடியாக அந்த அணியின் பர்ன்ஸ் மட்டுமே 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும் தற்போது உள்ள இங்கிலாந்து அணி எந்த ஒரு பந்து வீச்சுக்கும் மடிந்துவிடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இந்த கருத்துகளுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டின் கருத்தும் உள்ளது. அவர் பேசும்போது மொத்த அணியையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தற்போது இங்கிலாந்து அணிக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பை தொடரில் மோசமாக வெளியேறியதும் மொத்த அணியையும் மாற்றி எப்படி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது அதேபோல தற்போது டெஸ்ட் அணி யையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஜோ ரூட் கூறியுள்ளார். இதன் காரணமாக தற்போது அணியில் விளையாடும் பலரும் நீக்கப்பட்டு புது வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார் என்பது தெரியவருகிறது. ஜோ ரூட் தவிர வேறு யாரும் ரன்கள் எடுக்காததால் முக்கியமாக பேட்டிங் வரிசையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பந்துவீச்சிலும் ஆண்டர்சன் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சாதிக்காததால்
புது பந்துவீச்சாளர்களை விரைவில் இங்கிலாந்து அணியில் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.