இந்தியா நியூசிலாந்து இடையே அபூர்வமாக டை ஆன ஆட்டம்!

0
20655
Ind vs Nz

இந்திய நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேப்பியர் மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது இந்தப் போட்டியின் தாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்த அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது ,

தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட் களையும் இழந்தது அந்த அணில் அதிகபட்சமாக 59 ரன்களையும் கிளின் பிலிப்ஸ் ரன்களையும் பெற்றனர் . இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் 17 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட் களையும் அர்ஷதிப் சிங் இரு 37 எண்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்,

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தனது பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி துவக்கம் முதலே அதிரடி பாணி ஆட்டத்தை கடைப்பிடித்தது . இஷான் கிசான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடியான துவக்கத்தை ஆரம்பித்தனர் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் இறுதிப்பந்தில் 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் கிஷான் தனது விக்கெட்டை அடம் மிலின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார் .

. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீச வந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் சவுதி பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் அதனைத் தொடர்ந்து அவரது பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார் இவரை அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் சவுத்யின் பவுன்சர் பந்தில் அவுட்டானார் .. இதனால் இந்திய அணி மூன்று நபர்கள் முடிவில் 21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது ..

இந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர ஜோடிகளான கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் சூர்யா குமார் யாதவும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர் இவர்களின் கவுண்டர் அட்டாக்கினால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது இந்திய அணி பவர் பிளே முடிவில் 58 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது .

- Advertisement -

ஆட்டத்தின் ஏழாவது ஓவரின் மூன்றாவது பந்தில் சூரியகுமார் யாதவ் , சோதி பந்துவீச்சில் கிளன் பிலிப்ஸ் இடம் கேட்ச் கொடுத்த அவுட்டானார் அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் ஹர்த்திக் பாண்டியாவும் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தனர் .9 ஒன்றுபவர்கள் முடிவில் இந்திய அணி 75 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து இருந்த நிலையில் மீண்டும் ஆட்டம் மழையால் தடைப்பட்டது இந்த முறை மழை மிகவும் பரவலாக பெய்ததால் ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டது இதனால் டி எல் எஸ் படி முடிவுகளை அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஆட்டத்தின் நடுவர்கள் செல்லப்பட்டனர். ஒன்பது ஓவர்களின் முடிவில் DLS பார் 75 ரன்கள் இருந்தது. இந்தியாவும், ஒன்பது ஓவர்களின் முடிவில் 75 ரன்கள் எடுத்திருந்ததால் ஆட்டம் சமன் செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர் ..

இதனைத் தொடர்ந்து இந்திய அணி 1-0 தொடரை கைப்பற்றியுள்ளது ஹர்திக் பாண்டியா 30(18) ரன்களுடனும் தீபக் ஹூடா 9(9)ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர் . இன்றைய போட்டியில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார், சூர்யா குமார் யாதவ் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார் .

போட்டி சுருக்கம்
நியூசிலாந்து பேட்டிங் 160/10 (19,4 ஓவர்கள் )
டேவான் கான்வே 59(49)
கிளன் பிலிப்ஸ் 54(33)

இந்திய பந்துவீச்சு
அர்ஷிதீப் சிங் 4/37
முகமது சிராஜ் 4/17

இந்தியா பேட்டிங்

ஹர்திக் பாண்டியா 30(18)
சூரியகுமார் யாதவ் 13(10)

நியூசிலாந்து பந்துவீச்சு
சவுதி 27/2
அடம் மிலின் 23/1
சோதி 12/1