ஐபிஎல் தொடரில் வருகிறது புதிய விதி ; வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி இல்லை!

0
393
Ipl

ஐபிஎல் இல்  அறிமுகப்படுத்தப்பட உள்ள  ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிக்கான  வரைமுறைகளை ‘பி.சி.சி.ஐ’ நிர்வாகம்  வெளியிடப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக ‘கிரிக்பஸ்’ இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது .

நடைபெற இருக்கின்ற 17வது ஐபிஎல் தொடரில் பி.சி.சி.ஐ’யின் புதிய முயற்சியாக  ‘இம்பேக்ட் பிளேயரை’ அறிமுகப்படுத்த உள்ளது .இந்த விதிமுறையின்படி   ஒவ்வொரு அணியும் ஒரு ‘சப்ஸ்டிட்யூட்’ வீரரை  ‘பேட்டிங்’ மற்றும் பந்துவீச்சிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்  இந்த  விதியானது செய்யது அலி  முஸ்தாக்  டிராபியில் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டது .

- Advertisement -

இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம்  இந்த விதிகளை ஐபிஎல் போட்டிகளிலும்  அறிமுகப்படுத்தப்பட உள்ளது . இந்த விதிகளின்படி  ஒரு அணி  விளையாடும்  11  வீரர்கள் தவிர  மேலும் ஒரு  வீரரை  இம்பேக்ட் பிளேயராக  அறிவிக்க வேண்டும் . அந்த இம்பேக்ட் பிளேயர்  ஆட்டத்தின் 14 வது  ஓவருக்கு  முன்பாக  பயன்படுத்தப்பட வேண்டும் . அவர்  ‘பேட்டிங்’  மற்றும் பந்துவீச்சு  இரண்டு துறைகளிலும்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இயலும்.

இதற்கான புதிய விதிகள்  ‘ஐபிஎல்’ இல் வரையறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன  இதன்படி  ‘இம்பேக்ட்’ வீரராக  இந்திய வீரரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிகிறது . ஐபிஎல் இல் ஒரு அணியில் விளையாடும் 4 வெளிநாட்டு வீரர்களை  ‘இம்பாக்ட்’ பிளேயர் கொண்டு மாற்ற இயலாது . இந்த  விதியானது  இந்திய வீரர்களுக்கு மட்டுமே  பொருந்தும் .

இது குறித்து பேசிய ஐபிஎல் நிர்வாகி  ஐபிஎல் இல் ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் விளையாட வேண்டும் என்ற  ‘பிசிசிஐ’ இன் விதியில்  எந்த மாற்றமும் இல்லை . இந்த ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது வெளிநாட்டு வீரர்களுக்கு பொருந்தாது. அணியில் ஆடக்கூடிய மற்ற ஏழு இந்திய  வீரர்களில்  ஒருவருக்கு பதிலாக  இம்பேக்ட் பிளேயரை பயன்படுத்திக் கொள்ள முடியும்  என்று தெரிவித்தார் .

- Advertisement -

‘பிசிசிஐ’ இன் ‘ஐ பி எல் கவுன்சில்’  இந்த ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறைகளை  இன்னும் அதிகாரப்பூர்வமாக  வெளியிடாத நிலையில்  இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ‘பிசிசிஐ’ யின் மேனேஜர்கள்  இன்னும்  ஐபிஎல் அணிகளுடன்  ‘இம்பேக்ட் பிளேயர்’ விதி தொடர்பாக  பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .