பட்லர் மாதிரி ஒரு லெஜன்ட் ஜெய்ஸ்வாலுக்காக விக்கெட்டை தூக்கி எறிகிறார் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் – சஞ்சு சாம்சன்!

0
3595
Sanju samson

இன்று ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றிற்கான முக்கிய போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் தோற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. சாகல் 25 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்!

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தால் அற்புத துவக்கத்தை தந்தார்.

பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆக ஜெய்ஸ்வால் உடன் கரம் கோர்த்த சஞ்சு சாம்சன் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி பின்பு அதிரடியில் அவரும் இறங்கினார்.

மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய் ஸ்வால் 47 பந்தில் 12 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 98 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்றார். மேலும் 13 பந்தில் அரைசதம் அடித்து அதிவேக ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் உடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் தன் பங்குக்கு 29 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்.

இந்த ஜோடி மிகச் சிறப்பாக அதிரடியாக விளையாடி 13.1 ஓவரில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

வெற்றிக்குப் பின் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ” இன்று நான் எதுவும் செய்ய வேண்டியதாக இல்லை. கையில் பேட்டை பிடித்துக்கொண்டு எதிரில் ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்த்தேன். பவர் பிளேவில் அவர் எப்படி விளையாடுவார் என்று பந்துவீச்சாளர்களுக்குக் கூட தெரியும். அவர் பவர் பிளேவில் பேட்டிங் செய்வதை என்ஜாய் பண்ணுகிறார்.

சாகலுக்கு லெஜெண்ட் என்ற அடையாளத்தை வழங்க வேண்டிய நேரம் இது. அவரை எங்கள் அணியில் வைத்திருப்பதற்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அவரிடம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை பந்தை வீசச் சொல்லிக் கொடுத்தால் போதும். என்ன செய்வதென்று அவருக்கே தெரியும். அவர் இறுதிக்கட்ட ஓவர்களிலும் சிறப்பாக வீசுகிறார். ஒரு கேப்டனாக எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பௌலராக இருக்கிறார்.

எங்களுக்கு இன்னும் கால் இறுதி போன்ற இரண்டு போட்டிகள் இருக்கின்றன. ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொருவரும் முக்கியமானது.

ஜோஸ் பட்லர் போன்ற ஒரு லெஜெண்ட் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலுக்காக விக்கெட்டை தூக்கி எறிகிறார் என்றால் அணியில் உள்ள சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம். இன்று மிகவும் மகிழ்ச்சி ஆனால் சில போட்டிகள் உள்ளன!