“கோலி துரதிஷ்டசாலியா?!.. அதெல்லாம் கிடையாது விளையாட தெரியல!” – கம்பீர் கடுமையான விமர்சனம்!

0
1694
Gambhir

இன்று ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்திருக்கிறது!

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் ஷாகின் ஷா அப்ரிடி கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். இவர்கள் இருவரும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒரே போட்டியில், ஒரே பந்துவீச்சாளரிடம், இந்த முறையில் ஆட்டம் இழப்பது, இதுவே முதல் முறை.

- Advertisement -

ரோகித் சர்மா ஆட்டம் இழக்க களத்திற்குள் வந்த விராட் கோலி நஷீம் ஷா பந்துவீச்சில் அற்புதமான கவர் டிரைவ் விளையாடி பவுண்டரி அடித்தார். இன்று அவருடைய நாளாக இருக்கும் என்று வர்ணனைப் பெட்டியில் இருந்த முன்னாள் வீரர்கள் கூறியிருந்தார்கள்.

இந்த நிலையில் அடுத்த ஓவரை வீச வந்த ஷாஹீன் ஷா அப்ரிடி பந்தை லென்த்தில் இருந்து வீச, விராட் கோலி அதை தடுத்து விளையாட போக, பந்து இன்சைட் எட்ஜ் எடுத்து ஸ்டெம்பை தாக்கியது. இந்த முறை மோதலில் ஷாகின் ஷா அப்ரிடி விராட் கோலியை வென்றார்.

இதுகுறித்து ஆங்கில வர்ணனையில் பங்கு பெற்றிருந்த முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹைடன், வக்கார் யூனுஸ் மற்றும் கவுதம் கம்பீர் மூவரும் விராட் கோலி விக்கெட் குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

- Advertisement -

வக்கார் யூனுஸ் தனது கருத்தை பதிவு செய்யும் பொழுது “விராட் கோலி இந்த முறை துரதிஷ்டசாலியாக இருந்தார். பந்து இன்சைட் எட்ஜ் எடுத்தது. பந்து பேட்டுக்கும் வரவில்லை கொஞ்சம் தாழ்வாகவும் இருந்தது. ஆனால் லென்த்தை மாற்றி வீசியதற்காக முழு பெருமை ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு சேரும்!” என்று கூறியிருக்கிறார்.

இதில் மேத்யூ கைடன் கூறும் பொழுது வக்கார் யூனுஸ் கருத்தை ஆதரித்து
“இன்சைட் எட்ஜ் எடுத்த பந்து வேறு எங்காவது கூட பட்டு சென்று இருக்கலாம். ஆனால் பந்து சரியாக டெம்ப்பையே தாக்கியது. விராட் கோலி துரதிஷ்டசாலி!” என்று கூறியிருக்கிறார்!

மூத்த முன்னாள் வீரர்கள் இருவர் விராட் கோலி விக்கெட் பற்றி இவ்வாறு கூறியிருக்க, இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விராட் கோலியின் பேட்டிங் மீதான விமர்சனமாக தன்னுடைய பார்வையை வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“அது எதுவுமே இல்லாத ஷாட். முன்னோக்கியும் வரவில்லை பின்னோக்கியும் போகவில்லை. மிகவும் கேஷுவலாக இருந்தது. ஷாகின் ஷா அப்ரிடிக்கு எதிராக நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றால் இதுதான் நடக்கும். உங்களுக்கு முன்னோக்கி போவதா? இல்லை பின்னோக்கி வருவதா? என்று புரியாது!” என்று கூறியிருக்கிறார்!