23.1 ஓவரில் அபார அதிரடி சதம் அடித்து இசான் கிசான் ரசிகர்களுக்கு விருந்து!

0
805
Ishan

இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது!

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று பங்களாதேஷ் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரின் கடைசி போட்டி நடந்து வருகிறது. பங்களாதேஷ் அணி இந்தப் போட்டியையும் வென்று இந்திய அணியை வொய்ட் வாஷ் செய்ய முனைப்பு காட்டி வருகிறது!

இன்று நடைபெறும் போட்டிக்கு டாசில் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் முதலில் தனது அணி பந்து வீசும் என்று அறிவித்தார். ரோகித் சர்மா காயமடைந்து தொடரை விட்டு வெளியேறி இருக்க சிகர் தவான் உடன் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிசான் துவக்க வீரராக களம் இறங்கினார்.

சிகர் தவான் ஐந்தாவது ஓவரில் மெகதி ஹசன் வந்து வீச்சில் எல்பி டபிள்யு முறையில் எட்டு பந்துகளுக்கு மூன்று ரண்களெடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து இசான் கிசான் உடன் விராட் கோலி ஜோடி அமைக்க இந்திய அணியின் உயர ஆரம்பித்தது.

- Advertisement -

ஆரம்பத்தில் இருந்து அதிரடியில் ஈடுபட்ட இஷான் கிஷான் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நான்கு புறத்திலும் பந்துகளை விரட்டி அடித்து கடுமையாகச் சோதித்தார். அவரைக் கட்டுப்படுத்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இறுதியில் 23.1 ஓவரில் 85 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்து கிஷான் கிஷான் அசத்தினார். தற்போது அவர் 93 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 120 ரன்கன் எடுத்து விளையாடி வருகிறார்!