விராட்டின் பேச்சைக் கேட்டு ரசிகையான பார்வை இழந்தவர்; விராட் கோலி நெகிழ்ச்சி!

0
419
Viratkohli

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியின் 34-வது பிறந்தநாள் இன்று. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்தியாவைச் சேர்ந்த விராட் கோலியின் பிறந்தநாளை உலகம் எங்கிலும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு, கிரிக்கெட் விளையாட்டு நாடுகளின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களும் அன்போடு வாழ்த்துக் கூறி அவரது சிறப்பை பேசி வருகிறார்கள்!

விராட் கோலியின் இந்த புகழுக்கு மிக முக்கியக் காரணம், அவர் ஒருபோதும் நவீன கிரிக்கெட் ஷாட்கள் விளையாட மாட்டார். போல மரபு கிரிக்கெட் ஷாட் ஸ்வீப் ஷாட் கூட விளையாட மாட்டார். ஆனால் இது அத்தனையையும் விளையாடுகின்ற பேட்ஸ்மேனை விட, எதிரணிக்கு மிக கூடுதலான ஆபத்து வாய்ந்த பேட்ஸ்மேனாக வரையறுக்கப்பட்ட சில ஷாட்கள் மூலமே சிம்ம சொப்பனமாக இருப்பார் என்பதுதான்.

- Advertisement -

கிரிக்கெட்டில் எந்த சூழ்நிலை எல்லாம் அழுத்தம் என்று சொல்கிறார்களோ, அந்தச் சூழ்நிலையில் எல்லாம் மிக மிக இயல்பாக சாதாரணமாக விளையாடி வெற்றிகளை குவித்து, அழுத்தத்தை ஒருபோதும் தனது அணியினரும் ரசிகர்களும் உணராதபடி செய்து, இன்னொரு வீரர் வந்து எளிதில் எட்டி விட முடியாத ஒரு உயரத்தை அடைந்திருக்கிறார் விராட் கோலி!

உலகம் முழுவதும் அவர் எவ்வளவு பிரபல்யம் அடைந்து இருக்கிறார் என்றால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட ரொனால்டோ மெஸ்சிக்கு அடுத்து அதிக பணம் பெறுகிறார். கால்பந்து என்பது உலகில் பல நாடுகளில் விளையாடப்படுகின்ற விளையாட்டு. அதனால் அவர்களுக்கு அந்த அளவுக்கு செல்வாக்கும் புகழும் இருப்பதில் எந்த வியப்பம் கிடையாது. ஆனால் கிரிக்கெட் என்பது மிகத் திறமையோடு ஒரு ஏழு எட்டு நாடுகளில் தான் விளையாடப்படுகிறது. இவ்வளவு சிறிய வட்டத்தில் இருந்து விராட் கோலி உலகம் முழுவதும் பிரபல்யம் எட்டி இருக்கிறார் என்றால், அவர் தனது துறையில் எப்படியான ஆதிக்கத்தை செலுத்தி இருந்தால், இந்த உயரத்தை எட்டி இருக்க முடியும்?

தற்பொழுது அவரது பிரபல்யத்தில் பெரிதாக யாருக்கும் கிடைக்காத ஒரு அனுபவமாக, இங்கிலாந்தைச் சேர்ந்த எல்லி என்னும் கண் பார்வையற்ற பெண், விராட் கோலியின் பேச்சை மட்டுமே கேட்டு, அவரது ரசிகையாக மாறி தற்போது கிரிக்கெட் பார்க்கவும் ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான். ஒரு மனிதரின் விளையாட்டையே பார்க்காமல் அவரது பேச்சை மட்டுமே கேட்டு, அவருக்கும் அந்த விளையாட்டுக்கும் ரசிகராக மாறுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்!

- Advertisement -

இது பற்றி விராட் கோலி நெகிழ்ந்து பேசுகையில் ” இது எனக்கு தனித்துவமான சிறப்பு வாய்ந்தது. இப்படி ஒரு விஷயத்தை நான் அனுபவித்ததே கிடையாது. அந்தப் பெண் எனது பேச்சைக் கேட்டு ரசிகையாக இருக்கிறார். அதன் மூலம் அவர் கிரிக்கெட் பற்றி அறிந்து கிரிக்கெட்டுக்கும் ரசிகையாக இருக்கிறார். இந்த வகையில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன். எனக்கு இது மிகவும் தனித்த சிறப்பு வாய்ந்த ஒன்று. நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்!” என்று கூறியிருக்கிறார்!