2022 ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம், பலவீனம் & சிறந்த பிளேயிங் லெவன் குறித்த மேற்பார்வை

0
448
Mumbai Indians 2022

மும்பை அணியின் பலமே தக்கவைக்கப்பட்ட வீரர்களும், ஏலத்தில் அதிக விலைக்கொடுத்து வாங்கிய இஷானும்தான்.

இந்த முறை மும்பையின் ஏல வியூகம் எப்படியானதென்றால் ஆடும் லெவனில் ஏழு தரமான வீரர்கள் மேல் பெரியளவில் பணத்தை முதலீடு செய்வது, மீதி இடங்களுக்கு அறியப்படாத திறமைகளைக் கண்டறிந்து எடுத்து வளர்த்துக்கொள்வது என்பதாகத்தான் இருந்தது.

- Advertisement -

இதுவரை ஏலத்தில் பத்து கோடியைத் தாண்டி யார்மேலும் முதலீடு செய்திடாத மும்பை அணி நிர்வாகம் இஷான் மேல் 15 கோடி வரை போனது எதிர்பாராமல் நிகழ்ந்தது அல்ல. அதேபோல் இந்த சீசன் ஆடுவதற்கே சரியான வீரர்கள் இல்லாதபோது, ஆட வாய்ப்பில்லாத ஆர்ச்சரின் மேல் காத்திருந்து எட்டுகோடியைப் போட்டதும் ஆசையினாலோ, அறிவீனத்தாலோ நடந்தது இல்லை. அதேபோல் U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் மேல் போகாமல், செளத்ஆப்பிரிக்க U19 சூப்பர் ஸ்டார் டிவால்ட் பிரிவ்ஸ் மேல் போனதுமே!

அவர்கள் ஏலத்திற்கு முன்பாகவே இதைத் திட்டமிட்டே வந்திருக்கிறார்கள். மும்பை வான்கடேவின் ரெட்-சாய்ல் விக்கெட்டில் பும்ரா-ஆர்ச்சர் இணையை உலகத்தின் எந்த சிறந்த பேட்ஸ்மேனும் விரும்பமாட்டார்கள். உண்மையில் இப்படியொரு திட்டத்தை யோசித்ததை விட அதை அணி உரிமையாளர், கேப்டன் வரை ஏற்றுக்கொள்ள வைத்தது பெரிய விசயம்.

சுருக்கமாய் சொல்வதாய் இருந்தால் மும்பை அணி எதிர்காலத்திற்கான தரமான அணியை உருவாக்க, நடப்பிற்கு போட்டியளிக்கக்கூடிய ஒரு அணியை எடுத்துக்கொண்டுள்ளது. டிம்டேவிட்டை அவர்கள் எதிர்காலத்தில் பொலார்ட் இடத்தில் பார்க்கிறார்கள். டிவால்ட் ப்ரீவ்ஸ் டிவிலியர்சின் திறமையில் 60% இந்த முறை எட்டிப்பிடித்துக் காட்டினாலே, அடுத்த முறை ஐந்தாவது வீரராய் அவர் மும்பையால் தக்க வைக்கப்படுவார்.

- Advertisement -

திடீர் மருத்துவ செலவுகள், உல்லாச செலவுகளுக்கு இடமில்லாத நடுத்தர வர்க்கத்திற்கும் கீழான ஒரு குடும்பத்தின் நெருக்கடியான பட்ஜெட் போலானது மும்பையின் அணிக்கலவை. அணியின் முக்கியமான வீரர்கள் யாருக்கும் குறிப்பாய் இந்திய வீரர்களுக்குக் காயம் ஏற்படவே கூடாது. அதைச் சமாளித்துக்கொள்ளும் ப்ளக்ஸிபிலிட்டி அணியில் இல்லை. அதேசமயத்தில் ரோகித்-இசான்-சூர்யா மூவரில் ஒருவர் சிறப்பான பார்மிற்கு வந்தால் கூட மும்பை நல்ல போட்டியளிக்கும் அணியாய் திகழும்!

மும்பையின் உத்தேச ஆடும் லெவன்

ரோகித்-இஷான்
திலக்-சூர்யா
டிம்டேவிட்-பொலார்ட்
சஞ்சய்-சாம்ஸ்
மெரிடித்-பும்ரா-மார்க்கண்டே

ரோகித்-இஷான்-சூர்யாவின் பேட்டிங் திறமை, ரோகித்தின் ஆன்பீல்ட் கேப்டன்சி திறமை, மஹேலாவின் உலகத்தரமான வியூகங்கள் மும்பை அணியின் பலம். அளவான அணியென்பது பலகீனம்!