விராட் ரோகித்துக்கு தாங்கள் விழறத பார்க்க காத்திருக்காங்கனு தெரியும்.. 2 பேருமே கம்பீரை கண்டுக்கல – முகமது கைஃப் பேச்சு

0
126
Kaif

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தோல்வியடைவதை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் காத்திருக்கிறது என இருவருமே அறிவார்கள் என்று முகமது கைப் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருவரும் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் நின்று 169 பந்தில் 168 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெல்ல வைத்தார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக இருவரும் விளையாடிய போட்டி மறக்க முடியாததாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இவர்கள் காத்திருக்கிறார்கள்

இரண்டு ஜாம்பவான் வீரர்கள் தோல்வியடைவதை பார்ப்பதற்காக சிலர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என வெளிப்படையாகவே இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் விமர்சனம் செய்திருக்கிறார். யார் காத்திருக்கிறார்கள்? என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்து இருக்கிறார்.

இது குறித்து முகமது கைப் பேசும்பொழுது ” ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்குமே தாங்கள் தோல்வியடைவதற்காக சிலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். அந்த சிலர் யார் என்றால் தேர்வாளர்களும் மீடியாவில் இருந்து சிலரும். அதனால் இப்போது இருவருக்கும் ஒரு பிடிவாதம் வந்துவிட்டது. தங்களை அணியில் இருந்து யாரும் நீக்க முடியாத அளவுக்கு அவர்கள் விளையாட பார்க்கிறார்கள்”

- Advertisement -

கம்பீரை கண்டு கொள்ளவில்லை

“போட்டி முடிந்த பிறகு விராட் கோலி அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். ஆட்டநாயகன் விருது வாங்கிய ரோஹித் சர்மா கம்பீரைக் கடந்து செல்லும் பொழுது சிரித்திருக்க கூடும். ஆனாலும் அங்கு நின்று அவர் பேசவில்லை. அவர் கம்பீரை தாண்டி சென்று விட்டார். மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் தங்களது மரியாதை தங்களது கைகளில் தான் உள்ளது என்று தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிகிறது”

இதையும் படிங்க : கம்பீர் இனிமே அந்த வேலையை டீம்ல செய்யக்கூடாது.. அதனால தான் பெரிய தப்பு நடக்குது – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“இருவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் இப்பொழுது முழுதாக ஒரு சுற்று முடிந்தது போல இருக்கிறது. ஒரு இளம் வீரராக வரும் பொழுது நம்மை ஆதரிக்க யாரும் கிடையாது நாம் சிறப்பாக விளையாடிய நம் இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்வோம். தற்போது இவர்கள் இருவருமே இளம் வீரர்கள் போல தங்களை உணர்ந்து இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -