விராட் கோலி பற்றி இந்த ஒரு விஷயம் மட்டும் நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன் – டேவிட் வார்னர் பெருமிதம்

0
101

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் ஆட்டம் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஏற்கனவே இரண்டு ஒரு நாள் போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை இழந்த நிலையில் கடைசி மற்றும் சம்பிரதாயப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்தது. அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு பக்கபலமாக விராட் கோலி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இறுதியில் ரோஹித் சர்மா 121 ரன்கள் மற்றும் விராட் கோலி 74 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகிய விராட் கோலி, இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி குறித்து இது ஒரு நல்ல கேள்வி என்று நான் நினைக்கிறேன். இன்னும் விளையாட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து 2027 ஆம் ஆண்டு வரை விளையாட வேண்டும் என்று அவருக்கு ஆர்வம் இருந்தால் அவருடைய மனநிலை அப்படியே இருந்தால் அவரை ஒருபோதும் யாராலும் தடுக்க முடியாது. அவர் ஒரு சிறந்த தந்தை மற்றும் கணவர் என்பதோடு விளையாட்டில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்.

இதையும் படிங்க:சதம் அடித்தாலும் கோலி, ரோகித் இதை செய்யுங்க.. வாகனம் இயக்கவில்லை என்றால்.. இர்பான் பதான் கருத்து

எனவே எனக்கு அவரால் அதை சிறப்பாக செய்ய முடியும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சீக்கிரமே எழுந்து பயிற்சிக்கு தேவையான அனைத்தையும் அவரால் அங்கு சென்று செய்ய முடிவதில் ஆர்வம் இருக்கிறதா? இல்லையா? என்பது தான் மிக முக்கியம். எனவே இந்த விஷயத்தில் அவருடைய மனநிலையை பொறுத்து நான் ஒருபோதும் சந்தேகிக்க மாட்டேன்” என்று டேவிட் வார்னர் கூறியிருக்கிறார்.

- Advertisement -