இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலைமையில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணி குறித்து தனது விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சிக்கலில் இருக்கிறது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முதல் போட்டியில் விரைவாக ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஒரு நாள் உலக கோப்பை 2027 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறந்த அணியை தேர்வு செய்ய முயற்சிக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை காண இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணி மீது எந்த விதமான அழுத்தமும் இல்லை. தற்போது இருக்கும் அல்லது அழுத்தம் நாங்களாக உருவாக்குவது தான். என்னைப் பொறுத்த வரையில் இந்த ஒரு நாள் போட்டிகள் இரண்டு முனைகளில் மட்டுமே நடக்கின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்ய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேவை. அது பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். மூன்றாவது பவுலராக அர்ஸ்தீப் சிங் ஆக இருக்கலாம்.
இதையும் படிங்க:குல்தீப்புக்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் விராட் ரோகித்தான்.. பின்னணி காரணம் இதுதான் – இர்பான் பதான் பேட்டி
தேர்வுப் போட்டி என்பது ஹர்ஷித் அல்லது பிரசித் ஆகியோர் இடையே வரலாம். அல்லது ஐபிஎல் தொடரை பொருத்து வெளியில் இருந்து யார் வேண்டுமானாலும் வரலாம். குல்தீப் இதில் சரியானவராக இருக்கிறார். மற்றொரு புதிர் வருணனை பார்க்க வேண்டுமா? என்பதுதான். இரண்டாவது கேள்வி விராட் கோலி மற்றும் ரோஹித் இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவார்களா? என்பது தான். இல்லையென்றால் இந்த இரு தரப்பு தொடர்களை பயன்படுத்தி அவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் ஒருங்கிணைப்பு மற்றும் மேம்படுத்துதல் திறனில் பரிசோதனை செய்ய வேண்டும்” என்று அஸ்வின் கூறி இருக்கிறார்.






