இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியை தேர்வு குழு அறிவித்து இருக்கிறது. புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியில் முதல் மூன்று இடங்களில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது.
நடுவரிசை வீரர்கள்:
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா கில் மற்றும் மூன்றாவது இடத்தில் விராட் கோலி ஆகியோர் களமிறங்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று நடுவரிசையில் ஸ்ரேயாஸ், நான்காவது வீரராக களமிறங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா, ஐந்தாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராகுல் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போது ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடவில்லை என்பதால் அவருக்கு பதில் ஆறாவது வீரராக நிதிஷ்குமார் ரெட்டியை சேர்க்க வேண்டும் என்றும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டி உள்ளார். இதேபோன்று ஏழாவது வீரராக அக்சர் பட்டேலும், எட்டாவது வீரராக வாஷிங்டன் சுந்தரையும் பிளேயிங் லெவனனில் கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பவுலர்கள் யார்:
இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் பலமாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது வீரராக சிராஜும், பத்தாவது வீரராக ஹர்ஷித் ராணாவையும், 11 வது வீரராக ஆர்ஸ்தீப் சிங்கையும் சேர்க்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். தனது அணியில் குல்தீப்க்கு அவர் இடம் தரவில்லை.
இதையும் படிங்க: இந்தியா ஆஸி ODI டி20 சீரிஸ்.. இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்?.. போட்டி அட்டவணை – முழு தகவல்கள்
மேலும் ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூன்று வீரர்களும் ஆகாஷ் சோப்ரா அணியில் இடம்பெறவில்லை.ஹர்ஷித் ராணாவை விட பிரசித் கிருஷ்ணா ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட கூடியவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரசித் கிருஷ்ணாவுக்கும் ஆகாஷ் சோப்ரா அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுவரை 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பிரசித் கிருஷ்ணா 29 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.






