வெஸ்ட் இண்டீஸ் எனக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா வென்று இருக்கிறார். இதைத் தொடர்ந்து அஸ்வின் இல்லாத நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அவர் எவ்வாறு அணுகுகிறார் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரவீந்திர ஜடேஜா பந்து வீற்றிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பந்துவீச்சில் விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
அஸ்வின் இல்லாத நிலை…
இது குறித்து ரவீந்திர ஜடேஜா பேசும் பொழுது ” தற்போது அஸ்வின் ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் மூத்த பந்துவீச்சாளராக எனக்கு அதிகம் பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டு பார்த்தால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எங்களுடைய மொத்த வீரர்களும் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்கள்”
“கடந்த ஐந்து ஆறு மாதங்களாக நாங்கள் எப்படியான கிரிக்கெட் பிராண்டை விளையாடி வருகிறோம் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். இது ஒரு நல்ல அறிகுறி. நீண்ட காலத்திற்கு நாங்கள் இதே பாணியில் விளையாடினால் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும்”
கம்பீர் பாய் சொன்ன மாதிரி…
“கம்பீர் பாய் சொன்னது போல நான் தற்பொழுது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறேன். நான் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்தேன். தற்போது நான் மேலே பேட்டிங் செய்வதால் என்னை முழுமையான பேட்ஸ்மேனாக உணர்கிறேன். இதனால் முடிந்த வரையில் களத்தில் பேட்ஸ்மேன் ஆக நீண்ட நேரம் விளையாட விரும்புகிறேன்”
இதையும் படிங்க : நிதிசை வச்சு பெரிய மூவ் பண்றோம்.. ஆஸி சீரிஸ்க்கு பிளான் விமானத்துல தான் நடக்க போகுது – கேப்டன் கில் பேச்சு
“உண்மையைச் சொல்வது என்றால் நான் சாதனைகள் பற்றி அதிகம் சிந்திப்பது கிடையாது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். மூத்த வீரராக நான் இதை செய்யாவிட்டால் எனக்கு வேல்யூ இருக்காது. எப்போதும் 100% கொடுக்க நான் முயற்சி செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






