இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை கொண்டு வந்ததற்கான காரணம் குறித்து கங்குலி பேசி இருக்கிறார்.
தற்போது 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தயாராகிறது. திடீரென இளம் கேப்டனை நியமித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து கங்குலி தெரிவித்து இருக்கிறார்.
ரோஹித்துக்கு தெரியும்
இந்த நிலையில் ரோஹித் சர்மா வடிவத்தில் சமீபத்தில் கேப்டனாக இருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றார். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இந்திய தேர்வுக் குழு ரோஹித் சர்மாவை கேப்டனாக விரும்பவில்லை.
இதுகுறித்து கங்குலி பேசும் பொழுது ” வெளியில் இருந்து பார்க்கும் போது ரோஹித்துடன் கலந்து ஆலோசித்து விட்டு இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது நியாயமான முடிவு என்று நான் நினைக்கிறேன். ரோஹித் தொடர்ந்து விளையாடலாம். ஒரு இளம் கேப்டன் தொடர்ந்து தயார் நிலையில் இருக்கிறார். இது நல்ல விஷயம்”
கில் திறமையானவர்
“கில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மிகவும் சிறப்பான முறையில் திறமையானவராக இருந்தார். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கேப்டனாக இருந்து வழி நடத்துவது கடினமான காரியம். ஆனால் அவர் விளையாடிய விதமும் அணியை வழி நடத்திய விதமும் அபாரமாக இருந்தது”
இதையும் படிங்க : சாய் சுதர்சன் குழந்தை.. அவரை பற்றி தெரியும்.. இத மட்டும் அவருக்கு செய்யுங்க – அஸ்வின் கோரிக்கை
“இதன் காரணமாகத்தான் அவர் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வீரராகவும், ஒரு கேப்டனாகவும் அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.






