இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அரை சதம் அடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணி நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டனாக சுப்மன் கில் சாதனை
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் முதல்முறையாக நியமிக்கப்பட்டார். இந்தத் தொடரில் கேப்டனாக முதல் போட்டி முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து சாதனை படைத்தார். மேலும் முதல் போட்டியையும் வென்று அதிலும் சாதனையை வைத்தார்.
மேலும் இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய கேப்டனாகவும், மேலும் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் ஆகவும் மேலும் இரண்டு சாதனைகளை படைத்தார். ஒட்டுமொத்தமாக கேப்டன் சுப்மன் கில்லுக்கு இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றியாகவும் திருப்புமுனையாகவும் அமைந்தது.
இந்திய மண்ணில் சாதனை
இந்த நிலையில் இன்று சரியாக அரை சதம் அடித்து சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் சுனில் கவாஸ்கருக்கு பிறகு 47 ஆண்டுகள் கழித்து, இந்திய டெஸ்ட் கேப்டனாக முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.
இதையும் படிங்க : 9 ஆண்டுகள்.. இறுதியாக சாதித்த கேஎல்.ராகுல்.. மிக உணர்ச்சிபூர்வமான தருணம்.. இந்திய அணி முன்னிலை
தற்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக முதல் தொடரில் வெளிநாட்டு மண்ணில் மட்டும் இல்லாமல் சொந்த மண்ணிலும் அவர் மிகச் சிறப்பான முறையில் ஆரம்பித்திருக்கிறார். இந்த ஆண்டு அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் சிறப்பான முறையில் ஆரம்பித்திருக்கிறது.






