78 பந்தில் ஆஸியில் சூரியவன்சி ருத்ர தாண்டவம்.. 14 வயதில் நினைத்து பார்க்க முடியாத சாதனை

0
285
Suryavanshi

தற்போது ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்று வரும் யூத் டெஸ்டில் இந்திய வீரர் வைபோ சூரியவன்சி 78 பந்துகளில் சதம் அடித்து பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

தற்போது இந்திய அண்டர் 19 அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி மிகப்பெரிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

- Advertisement -

சுருண்ட ஆஸ்திரேலியா

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி மொத்தம் 91.2 ஓவர்கள் விளையாடி 243 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் தேவேந்திரன் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஆயுஷ் மத்ரே 15 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து மிடில் வரிசையில் வந்த திரிவேதி மிகச் சிறப்பாக வைபவ் சூரியவன்சி உடன் இணைந்து சதம் அடித்து 192 பந்தில் 142 எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

வைபவ் சூரியன்சி சாதனை

அதே சமயத்தில் தொடக்க வீரராக வைபவ் சூரியவன்சி ஒரு முனையில் அதிரடியில் மிரட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 78 பந்தில் சதம் அடித்தார். மொத்தமாக 86 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி இறுதியாக 428 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் டீம் மதிக்க தகுதி இல்லாதது.. நாங்க ஆசிய கோப்பைல செஞ்ச அதுவே பெருசு – அமித் மிஸ்ரா பேச்சு

ஆஸ்திரேலியாவில் யூத் டெஸ்டில் அடிக்கப்பட்ட அதிவேக சதம், 15 வயதை தொடுவதற்குள்ளாக யூத் டெஸ்டில் நூறு பந்துகளை எடுத்துக் கொள்ளாமல் அதிவேகமாக இரண்டு முறை சதம் என இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை வைபவ் சூரியவன்சி படைத்திருக்கிறார். இத்துடன் இந்திய அணிக்காக சச்சினை விட குறைந்த வயதில் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் இவருக்கு உருவாகியுள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -