சூரியகுமார் ரன் பின்கோடு மாதிரி இருக்கு.. கில் இருந்தால் உலக கோப்பை கிடைக்காது – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
207
Srikanth

இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆசிய கோப்பை தொடரில் பேட்ஸ்மேனாக தன்னை ஏமாற்றிவிட்டார் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் 100 ரன்கள் கூட எடுக்கவில்லை. இந்திய அணிக்கு அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து துணை கேப்டன் கில்லும் ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சூரியகுமார் ஏமாற்றி விட்டார்

இந்த ஆசியக் கோப்பை தொடரில் முதல் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 47 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு அடுத்து வேறு எந்த போட்டியிலும் அவரது பேட்டிங் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அவர் இந்த தொடரில் நூறு ரன்கள் கூட சேர்க்கவில்லை. இதே நிலையில் துணை கேப்டன் கில்லும் இருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் “சூரியகுமார் யாதவ் என்னை ஏமாற்றி விட்டார். அவருடைய ஸ்கோர் எல்லாம் பார்க்கும் பொழுது தற்போது பின்கோடு மாதிரி இருக்கிறது. பாகிஸ்தான் மிகவும் மோசமாக விளையாடியது என்பது உண்மைதான். கில் உடன் சேர்ந்து சூரியகுமார் யாதவ் பேட்டிங் ஃபார்ம் நமக்கு கவலை தருவதாக இருக்கிறது”

- Advertisement -

டி20 உலகக் உலக கோப்பை கடினம்

“கில் டி20 வடிவத்தில் அவ்வளவு ஆபத்தானவராக தெரியவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் அவர் மிகவும் சிறப்பாக இருக்கிறார். டி20 உலக கோப்பை வர இருக்கும் நிலையில் அவரை துணை கேப்டன் ஆக்கி இருக்கிறார்கள். என்னுடைய ஆரம்ப அணியின் தேர்வின் போது கூட அவரை நான் சேர்த்துக் கொள்ளவில்லை. இவர்கள் துணை கேப்டன் பொறுப்பையே கொடுத்திருக்கிறார்கள்”

இதையும் படிங்க : ஆசிய கோப்பை.. ஹர்திக் இல்லாத நேரத்தில் சிஎஸ்கே வீரர் தான் காப்பாற்றினார்.. மோர்னே மோர்க்கல் பெருமிதம்

“இந்த இந்திய அணி டி20 உலகக் கோப்பை சரியான அணி கிடையாது. இந்த தொடரில் சராசரி அணிகளுக்கு எதிராக சரியான அணியாக இருந்தது. ஆனால் டி20 உலகக் கோப்பையில் இதே அணியுடன் விளையாடினால் இந்திய அணிக்கு அது ஒரு பெரிய தடையாக இருக்கும்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

- Advertisement -