இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சபா கரீம் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடர்ந்து வெற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணியை இரண்டு முறை தோற்கடித்து விட்டு இறுதியாக பைனலில் மோதுகிறது. எனவே இந்திய அணியிடம் தொடர் தோல்வி அடைந்திருக்கும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்தும்.
இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம், இந்திய அணியின் பேட்டிங் நிலை குறித்தும் இறுதி போட்டியில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். மேலும் இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசை குறித்தும் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “டாஸ் வென்றால் இந்திய அணி பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இது இந்திய அணி மிகவும் உழைக்க வேண்டிய கடினமான பலவீனமான பகுதியாகும். கடந்த போட்டியில் இந்திய அணில் 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. கண்டிப்பாக இந்த இந்திய அணி 190 முதல் 200 ரன்கள் நிச்சயமாக எடுக்க வேண்டிய அணியாகும். இங்கே இந்திய அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக இந்த ஆடுகளம் சவாலானது அதுவும் மிடில் ஓவர்களில் சற்று கடினமாக இருக்கும்.
இதையும் படிங்க:நான் சொல்வதை தப்பா எடுத்துக்காதீங்க.. உங்கள் மீதுள்ள நன்மதிப்பில் சொல்கிறேன்.. பும்ராவுக்கு விளக்கம் அளித்த முகமது கையிப்
கடந்த போட்டியில் எங்கள் பேட்டிங் சரியாக வேலை செய்யவில்லை. மேலும் சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம். இந்திய டி20 அணியின் தொடக்க ஜோடி முடிவு செய்யப்பட்டு விட்டதால் சாம்சன் மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் உங்களது கீப்பர் விளையாட வேண்டும் என்றால் அவருக்கு அந்த இடமே சரியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






