இனி யாருக்கும் 15, 20 டெஸ்ட் போட்டிகள் வாய்ப்பு தர முடியாது.. டியர் கிரிக்கெட் வீரருக்கு அஜித் அகார்கர் நேரடி கல்தா

0
132

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து கருண் நாயரை நீக்கியது ஏன் என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தொடரின் போது அணியில் கம்பேக் தந்த கருண் நாயருக்கு அணியில் இடமில்லை.

கருண் நாயர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி அசத்தினார். மேலும், சீனியர்களுக்குப் பிறகு அவரை டெஸ்ட் அணிக்கு மீண்டும் வர பாதையை ஏற்படுத்தி தந்தது. வலது கை பேட்ஸ்மேனான நாயர் உடனடியாக பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். ஆனால் நடு வரிசையில் தொடர்ந்து மாற்றப்பட்டதால் பெரிய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை.

- Advertisement -

வாய்ப்பு தர முடியாது:

இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் பாதியில் பல தொடக்கங்களைப் பெற்ற போதிலும்,  நான்காவது டெஸ்ட் போட்டிக்கு அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், தொடரின் இறுதிப் போட்டியான ஓவல் டெஸ்டில் மீண்டும் சேர்க்கப்பட்ட் அவர், முதல் இன்னிங்ஸில் முக்கியமான அரைசதம் அடித்தார்.

ஆனால், தற்போது தேர்வுக்குழு புதிய வீரர்களை நோக்கி நகர்ந்தனர். நாயர் இங்கிலாந்தில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அகார்கர் கூறினார்.
இது குறித்து பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக, எல்லோருக்கும் 15-20 டெஸ்ட் போட்டிகளை வழங்க முடியாது. இங்கிலாந்தில் கருணிடமிருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்த்தோம்.” என்று அகர்கர்  கூறினார்.

- Advertisement -

எச்சரிக்கை மணி:

கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் 205 ரன்கள் குவித்தார், ஆனால் அவரது சராசரி 25.63 மட்டுமே. தற்போது அவர் உள்ளூர் தொடரில் விளையாடி வருகிறார், அங்கு அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 151 ரன்கள் எடுத்து, KSCA செயலாளர் XI அணியை கோவாவுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடு வரிசையை வலுப்படுத்த, ஃபார்மில் உள்ள தேவதத் படிக்கலை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 7 கேட்ச் விட்டிருக்காங்க.. ஆனா சூரியகுமார் அதை மட்டும் செய்யவே இல்லை.. நீ சூப்பர்பா – முகமது கைப் பேச்சு

இதனை தொடர்ந்து பேசிய அகார்கர், “WTC காரணமாக ஒவ்வொரு தொடரும் முக்கியமானதாக மாறுகிறது. நியூசிலாந்து தொடர் ஒரு எச்சரிக்கையாக இருந்தது. எல்லா தொடர்களும் முக்கியமானவை, குறிப்பாக வீட்டு மண்ணில் அதிக புள்ளிகளைப் பெற விரும்புகிறோம். நியூசிலாந்து தொடரில் நடந்தவை மீண்டும் நிகழக் கூடாது,” என்று அகார்கர் கூறினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது.

- Advertisement -