நான் போறேன்.. முடிவுக்கு வரும் ஸ்ரேயாஸ் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை.. சோகமான பின்னணி காரணம் – என்ன நடந்தது?

0
74
Shreyas

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என செய்திகள் தெரிவிக்கிறது.

அவருக்கு முதுகு பகுதியில் ஏற்கனவே இருந்து வரும் காயத்தின் காரணமாக அவரால் இனி டெஸ்ட் கிரிக்கெட்டை ஐந்து நாட்கள் காலத்திலிருந்து விளையாட முடியாது எனவும், அவரே இவை உணர்ந்து விலகி விட்டார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

திடீர் விலகல்

தற்போது ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவிற்கு வந்து இரண்டு அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஆனால் திடீரென இந்திய ஏ அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்த போட்டி நடப்பதற்கு சில மணி நேரம் இருந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்தது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் அடுத்து நடக்க இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் தேர்வாவதற்கு நூறு சதவீத வாய்ப்புகள் இருந்தது.

- Advertisement -

பின்னணி காரணம் என்ன?

ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்கனவே காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அவரால் ஐந்து நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக களத்தில் நின்று விளையாட முடியாது என்ற நிலைமை உருவாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து இனி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என ஸ்ரேயாஸ் ஐயர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் உடனும் தோல்வி.. சூப்பர் ஸ்டார் இருந்தும் இந்த நிலைமையா?.. இலங்கை கேப்டன் பேச்சு

எனவே இது குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துவிட்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார். மேலும் தன்னை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டிருப்பதாக செய்திகள் கூறுகிறது. தற்போது கருண் நாயர் இடத்தில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -