இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் எண்ணமே இல்லையா? ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராகவும் ஸ்ரேயாஸ் தடுமாற்றம்.. விவரம்

0
51

இந்திய அணி நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ், ஆசிய கோப்பை டி20 தொடரில் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதில் ஸ்ரேயாஸ், டெஸ்ட் போட்டியில் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.இதற்காக துலீப் கோப்பை தொடரில் வெஸ்ட் சோன் அணி சார்பாக விளையாடினார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய ஏ சுற்றுப்பயணம்:

ஆனால் அதில் இரண்டு இன்னிங்சிலுமே அவர் சொதப்பினார். முதலில் 25 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 12 ரன்கள் அவர் எடுத்திருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் போட்டியிலும் பங்கேற்கிறது.

இதில் முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி லக்னோவில் தொடங்கியது. இதில் இந்திய ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார். இதில் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடி இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி 532 ரன்கள் 6 விக்கெட் இழந்தது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் தடுமாற்றம்:

இதில் ஆஸ்திரேலியா அணியின் சாம் கான்ஸ்டாஸ் மற்றும் ஜோஸ் பிலிப் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் நாராயண் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஆகியோர் அரை சதம் அடித்தாலும் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை.
இந்த தருணத்தில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ், 13 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வெறும் எட்டு ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை.. நடுவரை தாக்கிய பாகிஸ்தான் வீரர்கள்.. போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்

இதில் ஒரு பவுண்டரி அடங்கும் எனினும் தேவுத்ட்  படிக்கல் மற்றும் துருவ ஜூரல் ஆகியோர் அணியை சரிவிலிந்து மீட்டு வருகின்றனர். தற்போது 81 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 232 ரன்கள் குறைவாகும். ஸ்ரேயாஸ் தொடர்ந்து உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவதால் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது.

- Advertisement -