டி20 கிரிக்கெட்.. ஐசிசி ரேங்க் பட்டியலில் இந்திய அணி மாஸ் சம்பவம்.. 4 NO1 இடங்கள்.. புதிய சாதனை

0
69
Varun

இன்று வெளியான சர்வதேச டி20 கிரிக்கெட் ஐசிசி ரேங்க் பட்டியலில் இந்திய அணி மற்றும் இந்திய வீரர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.

தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி உலக சாம்பியனாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் ரேங்க் பட்டியல்களிலும் இந்திய அணி மற்றும் இந்திய வீரர்கள் முதலிடங்களை பிடித்து அசத்தியிருக்கிறார்கள்.

- Advertisement -

பெஸ்ட் டீம் மற்றும் ஆல்ரவுண்டர்

தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 271 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா 266 புள்ளிகள், இங்கிலாந்து 257 புள்ளிகள் எடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் சர்வதேச டி20 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 237 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் முகமது நபி 231 புள்ளிகள், ஜிம்பாப்வே சிக்கந்தர் ராஸா 210 புள்ளிகள் எடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்

இதைத்தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி 733 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 717 புள்ளிகள், வெஸ்ட் இண்டீஸ் அகேல் ஹுசைன் 707 புள்ளிகள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : சூரிய குமாரை பன்றியென சொன்ன யூசுப்.. இதுதான் பாகிஸ்தான் குணமா? – மதன்லால் கடுமையான விமர்சனம்

மிக முக்கியமாக சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் பட்டியலில் அபிஷேக் சர்மா 884 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். இங்கிலாந்தின் பில் சால்ட் 838 புள்ளிகள், மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 794 புள்ளிகள் எடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக இந்திய அணி வீரர்கள் முதல் இடத்தை பிடித்து பெரிய ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -